இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 7
61. கானோ சுழற்சி என்றால் என்ன?
ஒரு நிறைவான வெப்ப எந்திரத்தில் 4 வீச்சுகளைக் கொண்ட சுழற்சி.
62. நிலைகாட்டும் படம் என்றால் என்ன?
கட்டுப்படம், கானோ கற்றை வரைபடமாகக் காட்டும் படம்.
63. கானோ சுழற்சியிலுள்ள வீச்சுகள் யாவை?
1. வெப்பம் மாறா இறுக்கம்.
2. ஒருபடித்தான வெப்ப நிலை விரிவு.
3. வெப்பம் மாறா விரிவு.
4. ஒரு படித்த வெப்பநிலை இறுக்கம். இச்சுழற்சியின் பயனுறுதிறன் அதிகம்.
64. கானோ நெறிமுறை என்றால் என்ன?
மீள்மாறு வெப்ப எந்திரத்தில் பயனுறு திறனைவிட எவ்வெப்ப எந்திரத்தின் பயனுறு திறனும் கூடுதலாக இருக்க இயலாது.
65. கானோ நெறிமுறை எவ்விதி அடிப்படையில் அமைந்தது?
வெப்பஇயக்கவியல் இரண்டாம் விதியின் அடிப்படையில் அமைந்தது.
66. வெப்ப இயக்கவியல் என்றால் என்ன?
வெப்பம் முதலிய ஆற்றல் வடிவங்களையும், வெப்ப நிலை, அழுத்தம், செறிவு முதலிய இயற்பியல் மாற்றங் களையும் ஆராயுந்துறை.
67. வெப்ப இயக்கவியல் விதிகள் யாவை?
1. வெப்பமும் வேலையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றப்படக் கூடியவை. உண்டாகும் வெப்பம் (H) செய்யப்பட்ட வேலைக்கு (W) நேர்வீதத்தில் இருக்கும். W d H. இதை 1847இல் ஹெர்மன் வான் ஹெல்ம் கோல்ட்ஸ் முன்மொழிந்தார்.
2. (1) சுற்றுப்புறத்தை விடக் குறைவாக ஒரு பொருளைக் குளிர்விப்பதன் மூலம் அதிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெற இயலாது - கெல்வின்.
(2) வெளியுதவியின்றித் தானாக இயங்கும் எந்திரத்தினால் குறைந்த வெப்பநிலையிலுள்ள பொருளிலிருந்து வெப்பத்தைப் பெற்று, அதிக வெப்பநிலையிலுள்ள பொருளுக்கு அதனை அளிக்க இயலாது -கிளவியஸ். (1850)
68. சார்லஸ் விதியைக் கூறு.
மாறா அழுத்தத்தில் குறிப்பிட்ட நிறையுள்ள வளியின் பருமன் 0° செ. வெப்பநிலையில் ஒவ்வொரு செல்சியஸ் பாகைக்கும் அதன் வெப்பநிலை உயர்த்தப்படும் பொழுது அதன் பருமன் மாறாப்பின்ன அளவில் பெருகுகிறது. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் வளிக்கு அப்பின்னம் 1/273.
இதை ஒரு சமன்பாடாக அமைக்கலாம்
V= V0 (1+t/273)
V0=0o செஇல் பருமன்.
V=to செல் பருமன்.
69. பாயில் விதியைக் கூறு
மாறா வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு நிறையுள்ள வளியின் பருமனும் அதைத் தாக்கும் அழுத்தமும் ஒன்றுக்கொன்று எதிர்வீதத்தில் இருக்கும்.
PV என்பது மாறா எண். P-அழுத்தம். w-பருமன்.
70. ஜூல் என்றால் என்ன?
வேலை அல்லது ஆற்றலின் அலகு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 7 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வெப்ப, கானோ, மாறா, என்ன, என்றால், பருமன், வெப்பம், இயலாது, குறிப்பிட்ட