இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 8
71. ஜூல் மாறிலி என்றால் என்ன?
J = WH J ஜூல் மாறிலி. W- வேலை, H- வெப்பம்.
72. ஜூல் விளைவு என்றால் என்ன?
ஒரு தடையின் வழியாக மின்னோட்டம் செல்லும் போது, அது உண்டாக்கும் வெப்ப விளைவு.
73. ஜூல் கெல்வின் விளைவு என்றால் என்ன?
உயர் அழுத்தப்பகுதியிலிருந்து குறைவழுத்தப்பகுதிக்குத் துளையுள்ள அடைப்பு வழியாக வளி விரிந்து செல்லும்பொழுது வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்.
74. ஜூல் விதி யாது?
நிலையான வெப்பநிலையில் இருக்கும் ஒரு வளியின் உள்ளாற்றல் அதன் பருமனைப் பொறுத்ததன்று. உயர் அழுத்தத்தில் மூலக் கூறுகளின் விளைவுகளால் அது செயலற்றதாக்கப்படும்.
75. வெப்பம் பரவும் மூன்று முறைகள் யாவை?
கடத்தல், சுழற்சி (சலனம்), கதிர்வீசல்.
76. கடத்தல் என்றால் என்ன?
திண்பொருள் வழியே வெப்பமும் மின்சாரமும் செல்லுதல். இவை இரண்டும் வெப்பக்கடத்தல், மின்கடத்தல் எனப்படும்.
77. கடத்தும் திறன் என்றால் என்ன?
வெப்பங் கடத்தும் திறன், மின்கடத்தும் திறன்.
78. கடத்தி என்றால் என்ன?
வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தும் பொருள் - செம்பு.
79. கடத்தியின் வகைகள் யாவை?
1. எளிதில் கடத்தி - செம்பு.
2. அரிதில் கடத்தி – நீர்
3. கடத்தாப் பொருள் - மரம், ரப்பர்.
80. வெப்பச் சுழற்சி என்றால் என்ன?
இது பரவ ஊடகம் தேவை. (நீர்). வெற்றிடத்தில் பரவாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 8 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஜூல், கடத்தி, திறன், விளைவு, கடத்தும்