இயற்பியல் :: வெப்பவியல் - பக்கம் - 11
101. இணைமாற்று என்றால் என்ன?
ஜூல் மாறிலி அல்லது வெப்ப எந்திர ஆற்றல் இணைமாற்று.
102. விரிவெண் என்றால் என்ன?
விரிவுத்திறன். வெப்பப் பெருக்கத்திற்கு ஒரு பொருள் உட்படும் நிலையின் அளவு.
103. இதன் வகைகள் யாவை?
நீள் விரிவெண், கனவிரிவெண்.
104. காற்றைத் தட்பமாக்கல் என்றால் என்ன?
காற்றின் வெப்பநிலையை மட்டுப்படுத்துதல்.
105. இதிலுள்ள மூன்று செயல்கள் யாவை?
1. காற்றை வெளுத்தல்.
2. ஈரப்பதமாக்குதல்.
3. ஈரத்தை நீக்குதல்.
106. இதிலுள்ள இருமுறைகள் யாவை?
1. ஒருமுக முறை.
2. மையமுக முறை.
107. குளிராக்கலிலுள்ள நெறிமுறை யாது?
செம்பழுப்பாகக் காய்ச்சிய இரும்பை நீரில் அமிழ்த்துக. உடன் நீரின் வெப்பநிலை உயரும். இரும்பு வெப்பம் இழக்கும்.
108. குளிராக்கி எவ்வாறு வேலை செய்கிறது?
இதிலுள்ள நீர்மம் தொடர்ந்து ஆவியாவதால், அதில் வெளியிலுள்ள வெப்ப நிலையைவிட உள் வெப்பநிலை குறைவாக உள்ளது. ஆதலால் பொருள்கள் குளிர்ச்சியாக உள்ளன. நீர்மம் ஆவியாகும்பொழுது, இது சுற்றுப் புறத்திலுள்ள வெப்பத்தை உட்கவர்கிறது.
109. குளிராக்கியின் பயன்கள் யாவை?
வீடுகள், மருந்தகங்கள் ஆகியவற்றில் பொருள்களைக் குளிர்ச்சியாக வைக்கப் பயன்படுவது.
110. நியூட்டனின் குளிர்தல் விதி யாது?
ஒரு பொருளின் வெப்ப இழப்பு அளவு, அப்பொருளுக்கும் அதன் சூழ்நிலைக்குமிடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்வீதத்திலிருக்கும். அது பொருளின் இயல்பை பொறுத்ததன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெப்பவியல் - பக்கம் - 11 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, இதிலுள்ள, வெப்பநிலை, வெப்ப, என்ன, என்றால்