இயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 7

61. புதிய இயற்பியல் என்றால் என்ன?
விண்ணகம், விண்வெளி நிகழ்ச்சிகள், விண்ணக வானியல், ஏவுகணைகள், செயற்கை நிலாக்கள் முதலியவை பற்றி ஆராயும் புதிய துறை. வானவெளி அறிவியலின் ஒரு பிரிவு.
62. நிரப்புதிறன் நெறிமுறை என்றால் என்ன?
டேனிஷ் இயற்பியலார் நீல்ஸ்போர் கருத்து: "ஒளியன் ஒளியனே. அலை அலையே” இது ஐயப்பாட்டு நெறிமுறையின் ஒரு வகையே. இதை இவர் 1927இல் கூறினார்.
63. எய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை என்றால் என்ன?
துகளின் உந்தத்தையும் நிலையையும் வரம்பிலாத் துல்லியத்தோடு அறிய இயலாது என்னும் நெறிமுறை.
64. இதை இவர் எப்பொழுது கண்டுபிடித்தார்.
இவர் இதை 1927இல் கண்டுபிடித்தார்.
65. ஒளிமின்கலம் என்றால் என்ன?
மின்காந்தக் கதிர் வீச்சினால் மின்னோட்டத்தை உண்டாக்கும் கருவி. தொலைக் காட்சியில் பயன்படுவது.
66. ஒளிமின்னணுவியல் என்றால் என்ன?
மின்சாரம், ஒளி ஆகிய இரண்டிற்குமிடையே ஏற்படும் வினையை ஆராயுந் துறை.
67. ஒளி உமிழ்கலம் என்றால் என்ன?
ஒளி எதிர்மின் வாயிலிருந்து உமிழப்படும் மின்னணுக்களை அளிப்பதன் மூலம், கதிர்வீச்சாற்றலைக் கண்டறியுங் கருவி.
68. ஒளி உமிழ் திறன் என்றால் என்ன?
ஒளியூட்டப்படும்பொழுது மின்னணுக்களை உமிழும் பொருளின் பண்பு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னணுவியல் - பக்கம் - 7 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, இவர்