இயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 2
11. அரைகுறைக்கடத்தி என்றால் என்ன?
சிலிகான் அல்லது ஜெர்மானியம். இது படிகத் திண்மம். இதன் மின் கடத்தும் திறன் கடத்திக்கும் காப்புப் பொருளுக்கும் இடையில் உள்ளது.
12. அரைக்குறைக்கடத்தியின் சிறப்பென்ன?
மின்னணுவியலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
13. படிகப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) என்றால் என்ன?
ஜெர்மானியப் படிகத்தை மையமாகக் கொண்ட கருவியமைப்பு
14. இதன் சிறப்பென்ன?
வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி ஆகியவற்றின் மின்சுற்றுகளின் அடிப்படையாகும்.
15. படிகப்பெருக்கியின் வகைகள் யாவை?
1. ஒருமுனை வழிக்கடத்தி.
2. இருமுனை வழிக் கடத்தி.
16. படிகப்பெருக்கியின் வேலைகள் யாவை?
1. வானொலித் திறப்பியினை (வால்வு) நீக்கி அதன் வேலையைச் செய்வது.
2.மின்னலைகளைப் பெருக்குவது.
3. எதிர்மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக்குவது.
17. படிகப்பெருக்கியின் சிறப்புகள் யாவை?
1. வெப்பம் ஏறாமல் உடன் வேலை செய்வது.
2. அளவு மிகச் சிறிது. ஆகவே குறைந்த இடத்தை அடைத்துக் கொள்வது.
3. உழைப்புத் திறன் அதிகம்.
18. படிகப்பெருக்கியின் பகுதிகள் யாவை?
உமிழி, அடி, திரட்டி.
19. வாயில்மின்னோட்டம் என்றால் என்ன?
புல விளைவுப் படிகப் பொருத்தியின் வாயில்சுற்றிலும் படிகத்திருத்தியின் எதிர்மின்வாயிலும் ஓடுவது.
20. ஒருங்கிணைச்சுற்று (IC) என்றால் என்ன?
ஒரு தொகுதியில் பல இயைபுறுப்புகளை உள்ளடக்கிய சுற்று. இது இருவகைப்படும்; ஒற்றைமுறை ஒருங் கிணைந்த சுற்று, கலப்புமுறை ஒருங்கிணைந்த சுற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னணுவியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, என்றால், படிகப்பெருக்கியின், என்ன, சுற்று