இயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 1
1. மின்னணுவியல் என்றால் என்ன?
1. மின் சுற்றுகள் பெருக்கத்தை ஆராயும் பயன்முறை அறிவியல், 2. மின்னணுக் கருவிகள்.
2. நுண் மின்னணுவியல் என்றால் என்ன?
சிலிகான் நறுவல்களை உற்பத்தி செய்தல், பயன்படுத்தல் பற்றி ஆராயுந்துறை. தகவல் தொடர்பியலில் ஒரு பெரும் புரட்சியை உருவாக்கி வருவது.
3. நுகர்வோர் மின்னணுக் கருவிகள் என்றால் என்ன?
வானொலி, தொலைக் காட்சி, வீடியோ முதலிய வீட்டில் பயன்படும் மின்னணுக் கருவியமைப்புகள்.
4. ஆற்றல் மின்னணுவியல் என்றால் என்ன?
திண்ம நிலைத் தொழில்நுட்ப இயல். தொகுதியாற்றல் வழங்குதலைத் திறமையாகக் கையாள்வது. இதில் அரை குறைக்கடத்தி அமைப்புகள் பயன்படுகின்றன.
5. ஒளி மின்னணுவியல் என்றால் என்ன?
ஒளியலை வழிகாட்டு நுட்பங்கள் உணர்விகளில் பயன்படுவதை ஆராயுந் துறை இது.
6. ஒளியனியல் என்றால் என்ன?
ஒளித்துகள்கள் என்பவை ஒளியன்கள் ஆகும். இவற்றை ஆராயுந்துறை ஒளியனியல்.
7. ஒளியன் கருவியமைப்புகள் யாவை?
இவை ஒளியின் அடிப்படையில் அமைந்தவை. நீளச் சார்பிலாப் பொருள்களைப் பயன்படுத்துபவை.
8. ஒளிமின்சாரம் என்றால் என்ன?
மின்காந்தக் கதிர்வீச்சு அல்லது ஒளியினால் உண்டாகும் மின்சாரம்.
9. அழுத்தமின்சாரம் என்றால் என்ன?
சில படிகங்கள் இறுக்கப்படும்பொழுது அவை உண்டாக்கும் மின்சாரம்.
10. இதன் பயன் யாது?
உயர் நிலைப்பு மின்னணு அலை இயற்றிகள், உயர் நம்பக ஈர்ப்பிகள், வளி ஏற்றிகள் ஆகியவற்றில் பயன்படுவது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னணுவியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மின்னணுவியல், மின்னணுக்