இயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 5
41. மாற்றமைப்பி என்றால் என்ன?
ஒலி, ஒளி, வெப்பம் முதலிய மின்சாரமல்லாக் குறிபாடுகளை மின்குறிபாடுகளாக மாற்றுங் கருவி.
42. தொலையழைப்பி (பேஜர்) என்றால் என்ன?
ஒரு மின்னணுக்கருவி அமைப்பு. குறிப்பிட்ட ஒலிமூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. இடுப்பில் செருகிக் கொள்ளலாம்.
43. ஒளி இருமுனைவாய் என்றால் என்ன?
அரைகுறைக்கடத்திகளின் இருமுனைவாய் ஒளியூட்ட லுக்கேற்ப மீள்மாற்ற மின்னோட்டம் வேறுபடுவது.
44. ஒளிநகலி என்றால் என்ன?
அச்சியற்றிய அல்லது எழுதிய பகுதியின் படி எடுக்குங் கருவி.
45. சாளரம் (விண்டோ) என்றால் என்ன?
1. புவிக்காற்று வெளியிலுள்ள திறப்புகளில் ஒன்று. புறவான வெளியிலிருந்து ஒளியும் வானொலி அலைகளும் இவற்றின் வழியே ஊடுருவிப் புவியை அடைகின்றன.
2. கணிப்பொறித் திரையில் உள்ளது. தனி விளைவு களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகுதி.
46. உட்பாடு (இன்புட்) என்றால் என்ன?
இடுவரல், செய்திகளை உள் அனுப்புதல்.
47. உட்பாட்டுக் கருவியமைப்பு என்றால் என்ன?
கணிப்பொறி புற ஒருங்கில் உள்ளது. எ-டு கை நெம்புகோல். இக்கருவி கணிப்பொறிக்கு செய்திகளை அனுப்புவது.
48. வெளிப்பாடு (அவுட்புட்) என்றால் என்ன?
விடுவரல். செய்திகளை வெளி அனுப்பல்.
49. வெளிப்பாட்டுக் கருவியமைப்பு என்றால் என்ன?
செய்திளை வெளியனுப்பும் கருவி.
50. அச்சுப்பாடு என்றால் என்ன?
இது அச்சியற்றியினால் தாளில் அச்சிடப்படுவது. எ-டு பட்டியல்கள், படம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னணுவியல் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, செய்திகளை, கருவி