இயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 3
21. ஆற்றல் பெருக்கல் என்றால் என்ன?
ஓர் அரைகுறைக் கடத்தியுடன் மாசினைச் சேர்த்து, அதன் மின்கடத்தும் திறனைக் கட்டுப்படுத்தல். சேர்க்கப் படும் மாசுகள் பாசுவரம், பொரான்.
22. மாசு என்றால் என்ன?
கடத்தும் திறனை உயர்த்த அரைகுறைக் கடத்திகளில் சேர்க்கப்படுவது. எ-டு. சிலிகன், பாசுவரம்.
23. கதிரவன் மின்கலங்கள் என்றால் என்ன?
இவை அரைகுறைக் கடத்திகள்.கதிரவன் கதிர்வீச்சுக்களை மின்னாற்றலாக மாற்றுபவை. செயற்கை நிலாக்களில் பயன்படுபவை.
24. கட்டவிழ் மின்னணு என்றால் என்ன?
எம் மூலக்கூறுடனும் (அயனி அல்லது அணுவுடனும்) சேராத மின்னணு. மின்புலக் கவர்ச்சியால் கட்டவிழ் நிலையில் இயங்குவது.
25. கட்டவிழ் ஆற்றல் என்றால் என்ன?
குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் ஒரு தொகுதியில் வேலை நடைபெறுவதற்கு இருக்கக்கூடிய
ஆற்றல்.
26. மின்னணுக் கடிகாரம் என்றால் என்ன?
ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு துல்லியமாக இயங்கும் கடிகாரம். இதற்குச் சீசியம் 133 பயன்படுகிறது.
27. இதன் சிறப்பென்ன?
இது 6000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வினாடி இழக்கவோ கூடவோ செய்யும். இது அமெரிக்காவில் போல்டர் கொலராடோ ஆய்வுக் கூடத்திலுள்ளது.
28. மின்னணு வில்லை என்றால் என்ன?
மின்னணுக் கற்றைகளைக் குவிக்கும் கருவியமைப்பு. இவ்வில்லைகள் மின் புலங்களைப் பயன்படுத்துபவை.
29. மின்னணு நுண்ணோக்கியின் இரு வகைகள் யாவை?
1. செலுத்தும் மின்னணு நுண்ணோக்கி.
2. அலகிடும் மின்னணு நுண்ணோக்கி.
30. மின்னணு ஒளிஇயல் என்றால் என்ன?
மின்னணுக் கற்றைகளை இயக்கவும் குவிக்கவும் மின் புலங்களையும் மின்காந்தப் புலங்களையும் பயன் படுத்தும் துறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னணுவியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மின்னணு, மின்னணுக், அரைகுறைக், ஆற்றல், கட்டவிழ்