இயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 4

31. உடல்மின்னியல் என்றால் என்ன?
மின் நிகழ்ச்சிகளுக்கேற்ப உயிரிகள் எவ்வாறு இயங்கு கின்றன என்பதை ஆராயுந் துறை.
32. லேசர் என்றால் என்ன?
ஒர் உயரிய ஒளிக்கருவி. ஆற்றல் வாய்ந்ததும் ஒருங் கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்கவல்லது.
33. இதன் பயன்கள் யாவை?
மருத்துவம் (கண்ணறுவை), அறிவியல், தொழில் நுட்ப வியல் முதலிய துறைகளில் பயன்படுவது.
34. லேசரின் சிறப்பென்ன?
படிகப் பெருக்கிக்கு அடுத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சி செய்து வருங்கருவி. எல்லாத் துறைகளிலும் பயன்படுவது.
35. கிளர்திறன் என்றால் என்ன?
ஓரலகு பரப்பிலிருந்து உமிழப்படும் கதிர்வீச்சு ஒட்டம்.
36. கிளரணு என்றால் என்ன?
ஓர் குறைக்கடத்தியினால் கிளர் நிலையிலுள்ள மின்னணுக் கடத்தலுக்கு ஆயத்தமாக இருப்பது.
37. மிகுமின்னணு என்றால் என்ன?
குறைக் கடத்தியில் அமைந்திருப்பது. மாசு ஒன்றினால் அளிக்கப்படுவது. சவ்வீரம், பாசுவரம் முதலியவை மாசுகள். மின் கடத்தும் திறனை உண்டாக்கக் குறை கடத்திகளில் சேர்க்கப்படும் மாசுகள் இவை.
38. கிளர்வாக்கல் என்றால் என்ன?
அணு மூலக்கூறு, அணுக்கரு ஆகியவற்றின் ஆற்றலைக் கூட்டுதல். அடிநிலையிலிருந்து உயர் நிலைக்குச் செல்வதால் ஆற்றல் அதிகமாகும்.
39. தொலை அதிர்வச்சு (டெலக்ஸ்) என்றால் என்ன?
செவியுறு அதிர்வெண் கொண்ட தொலையச்சு முறை. விரைவுச் செய்திகள் அனுப்ப அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிலையங்களில் பயன்படுவது.
40. தொலையச்சு என்றால் என்ன?
செய்திகளைத் தானே அச்சு இயற்றும் கருவி. ஒரு தொலைத் தொடர்பு முறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னணுவியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பயன்படுவது