இயற்பியல் :: மின்னணுவியல் - பக்கம் - 6
51. தொலையறிதல் என்றால் என்ன?
இது ஒரு பயனுறு அறிவியல். வானிலை முன்னறிவிப்பு, கனிவளங்காணல் முதலியவற்றை அளிப்பது. இதற்குச் செயற்கைநிலாக்கள் பயன்படுகின்றன.
52. தொலைநகல் என்றால் என்ன?
உருநகல் எந்திரம். விரைந்து தகவலைஅனுப்ப உதவும் கருவியமைப்பு.
53. தொலைஇயக்கி (ரொபோட்) என்றால் என்ன?
1. தானியங்கு கருவித் தொகுதி.
2. எந்திரமனிதன்.
54. அலைத்துகள் என்றால் என்ன?
ஒளித்துகளுக்குரிய (ஒளியன்) பெயர். அலைப்பண்பும் துகள் பண்பும் இருப்பதால் இப்பெயர். வேவ்,
பார்ட்டிகிள் ஆகிய இரண்டின் சுருக்கம்.
55. மின்னணுத் துப்பாக்கி என்றால் என்ன?
நிலையான மின்னணுக் கற்றையை உண்டாக்குங் கருவி.
56. இதன் பயன் யாது?
மின்னணு நுண்ணோக்கியிலும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுவது.
57. வரம்பிடம் என்றால் என்ன?
தட்டு அல்லது நாடாவில அமைந்துள்ள நிகழ்ச்சிக்குரிய நினைவகப் பரப்பு.
58. சொல் செயல்முறையாக்கி என்றால் என்ன?
இது கணிப்பொறி வழியமைந்த தட்டச்சுப்பொறி.
59. கணிப்பொறி அல்லது கணினி என்றால் என்ன?
கட்டளைகளுக்கு ஏற்பச் செய்திகளை முறையாக்கும் உயர்நிலை மின்னணுக் கருவியமைப்பு.
60. லோரன் என்றால் என்ன?
கப்பல் போக்குவரத்து நீண்ட எல்லை உதவி என்பது இதன் பொருள் (Long-Range. Aid to Navigation). வானவூர்திகள் அல்லது கப்பல்களுக்குரிய வானொலிவழிப் போக்கு வரத்து முறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னணுவியல் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அல்லது