இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 4
31. தடையளிப்பி (ரெசிஸ்டர்) என்றால் என்ன?
ஒரு மின்சுற்றில் தெரிந்த தடையைப் பகுதியாக சேர்த்தல்.
32. வீட்சன் மின்சுற்று என்றால் என்ன?
ஒரு தடையின் மதிப்பை அளக்கப் பயன்படும் சுற்று.
33. மின்தடை மாற்றி என்றால் என்ன?
இது மின்தடையின் அளவைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் கருவி.
34. மின் எதிர்ப்பு என்றால் என்ன?
ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு.
35. இது எவ்வாறு உண்டாகிறது?
இது மின்தடை, மின்நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது. ஓம்களில் அளக்கப்படுவது.
36. தடம் மாற்றி என்றால் என்ன?
மின்னோட்டமானியுடன் பக்க இணைப்பில் குறைந்த தடையை இணை. இதுவே தடம் மாற்றி. இம்மானியின் எல்லையை இது மாற்றும்.
37. மின்னியக்குவிசை என்றால் என்ன?
ஒரு மின்கலத்தின் இருமுனைகளுக்கிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாடு. அலகு ஒல்ட்
38. மின்னியக்குவிசை, மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு என்ன?
C = E C.
C-மின்னோட்டம்.
E-மின்னியக்குவிசை
R-தடை
39. வாட் என்றால் என்ன?
திறனின் எஸ்.ஐ. அலகு. ஒரு வினாடிக்கு ஒரு ஜூல் என அது வரையறுக்கப்பட்டுள்ளது.
40. வாட்மணி என்றால் என்ன?
மின்னளவுகளில் பயன்படுத்தப்படும் ஆற்றல் அலகு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அலகு, மின்னியக்குவிசை, மின்தடை, மாற்றி