இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 3
21. மின்னோட்டப் பலன்கள் யாவை?
1. ஒளிப்பலன் - மின்விளக்கு.
2. வெப்பப்பலன் - வெப்ப அடுப்பு.
3. காந்தப்பலன் - மின்காந்தம்.
4. வேதிப்பலன் - மின்னாற்பகுப்பு.
22. மீ மின்னோட்டம் என்றால் என்ன?
பயனுறு மின்னோட்டம். மின்சுற்றில் கணக்கிடப் படுவது.
23. சுழிப்பு மின்னோட்டம் என்றால் என்ன?
இது வரம்பு மீறிய மின்னோட்டமாகும்.
24. இதன் தீமை யாது?
தீவிபத்துக்கு வழிவகுக்கும்.
25. நிலைமின்சாரம் என்றால் என்ன?
அசையா நிலையிலுள்ள மின்னேற்றங்கள் உண்டாக்கும் மின்சாரம்
26. மின்சாரம் உண்டாக்கும் இருமுறைகள் யாவை?
வெப்ப ஆற்றல் மூலமும் நீராற்றல் மூலமும் மின்சாரத்தை உண்டாக்கலாம்.
27. மின்னோட்ட அலகு யாது?
அலகு ஆம்பியர்.
28. மின்திறன் என்றால் என்ன?
மின்தொகுதியில் நடைபெறும் வேலையின் அளவைக் குறிப்பது. அலகு வாட்.
29. மின்தடை என்றால் என்ன?
கம்பிகளில் மின்னோட்டம் செல்லும்பொழுது அலை ஏற்படுத்தும் தடை. அலகு ஒம்.
30. ஓம் விதி யாது?
மாறா வெப்பநிலையில் மின்னழுத்த வேறுபாட்டிற்கு மின்னோட்டம் நேர் வீதத்திலும் மின்தடைக்கு எதிர்வீதத்திலும் இருக்கும்.
I=ER
E=IR
I - மின்னோட்டம்.
E - மின்னழுத்த வேறுபாடு
R மின்தடை
இவ்விதி 1827இல் கண்டறியப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மின்னோட்டம், என்ன, என்றால், அலகு, யாது