இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 6
51. சுழல் என்றால் என்ன?
அணுக்கள் அல்லது துகள்களின் சுழற்சி இயக்கம்.
52. சுழலியன் (சைக்ளோட்ரான்) என்றால் என்ன?
அணு விரைவாக்கி. முன்னணு முதலிய மின்னேற்றம் பெற்ற துகள்களை விரைவாக்கும் கருவியமைப்பு. அணு ஆராய்ச்சிக்குப் பயன்படுவது.
53. அணுக்கரு மின்கலம் என்றால் என்ன?
இதில் துகளாற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவது.
54. அனுப்பிளவு என்றால் என்ன?
அணுக்கரு வினையில் கன அணுக்கரு இரு சம துண்டு களாகச் சிதைத்து அளப்பரிய ஆற்றலை அளிப்பது (அணுக்குண்டு).
55. அனுப்பிளவு ஆய்வு முதல் அறிவிப்பு எப்பொழுது வெளியாயிற்று? இதனுடன் தொடர்புடைய அணு
இ.9.
அறிவியலார் யார்?
1938இல் வெளியாயிற்று. தொடர்புடைய அணு அறிவியலார்: ஆட்டோ ஹான், பிரிட்ஸ் ஸ்ராஸ்மன், லைசி மெயிட்னர், ஆட்டோ பிரிஷ், போர் மற்றும் பெர்மி.
56. அனுப்பிணைவு என்றால் என்ன?
அணுக்கள் சேர்வதால் உண்டாகும் வினை (அணுக்குண்டு).
57. முதல் அணுக்கரு இணைவு வினையை யார், எப்படி உருவாக்கினார்?
ரூதர்போர்டும் அவர்தம் நண்பர்களும் டியூட்டிரியத்தை டியூட்ரான்கள் மூலம் சிதைத்து ட்ரைடியத்தை உருவாக்கினர்.
58. அணுக்கருவிசை என்றால் என்ன?
அணுக்கருவன்களுக்கிடையே உள்ள வலுவான கவர்ச்சி விசை.
59. அணுக்கரு எரிபொருள் என்றால் என்ன?
இது பிளவுபடக்கூடிய அல்லது செறிவு மிக்க ஒரிமம். நீண்ட அரைவாழ்வுக் காலங் கொண்டது. அணு உலையில் பிளவு அல்லது இணைவுக்குட்படுவது. எ-டு. யுரேனியம் 235.
60. அணுக்கருவாற்றல் என்றால் என்ன?
அணுவின் கருவிலிருந்து உண்டாகும் அளப்பரிய ஆற்றல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அணுக்கரு, அல்லது