இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 2

11. மின்னணு என்றால் என்ன?
எதிர் மின்னேற்ற(-)முள்ள துகள். எல்லா அணுக்களிலும் அணுவைச் சுற்றியுள்ளது. இதுவே தனிமத்தின் வேதி வினையை உறுதி செய்வது.
12. மின்னணுவைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜே.ஜே. தாம்சன், 1897.
13. மின்னணு ஏற்றத்தைப் பற்றி ஆராய்ந்தவர் யார்?
இராபர்ட் மில்லிகன், 1911.
14. மின்னணுச் சார்பு அலைச் சமன்பாட்டை யார், எப்பொழுது கண்டுபிடித்தார்?
பால் டிராக் 1928இல் கண்டுபிடித்தார்.
15. அனுப்பருமன் என்றால் என்ன?
திண்ம நிலையிலுள்ள 1 கிராம் அணு அடைத்துக் கொள்ளும் கொள்ளளவு.
அனுபபருமன் = அணு எடைஅடர்த்தி
16. அணு எடை என்றால் என்ன?
இது ஒரு தனிமத்தின் ஒர் அணுவின் எடைக்கும் 1/12 பங்கு கரி 12 ஒரிமத்தின் எடைக்குமுள்ள வீதமாகும்.
17. அணுக்கட்டெண் என்றால் என்ன?
ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறிலிருக்கும் அணுக்களின் எண்ணிக்கை.
18. இதன் பயன் யாது?
இதிலிருந்து ஒரு தனிமத்தின் மூலக்கூறு வாய்பாட்டை எழுதலாம்.
19. அணுக் கடிகாரம் என்றால் என்ன?
துல்லியக் கடிகாரம். அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின்அதிர்வுகளிலிருந்து காலஅளவு அடிப்படை அமைந்துள்ளது.
20. அணுவாற்றல் என்றால் என்ன?
அனுப்பிளவு அல்லது இணைவினால் பெறப்படும் அளப்பரிய ஆற்றல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, தனிமத்தின், யார்