இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 4

31. மாறுநிலை வினை என்றால் என்ன?
அணுக் கருத் தொடர் வினை.
32. நிறை வேறுபாடு என்றால் என்ன?
அணுக்கரு நிறைக்கும் அதன் ஆக்கக் கருவன்களின் (நியூக்ளியான்கள்) நிறைத் தொகைக்குமுள்ள வேறுபாடு.
33. நிறை நிறவரைவி என்றால் என்ன?
தனியணுக்களின் துல்லிய நிறையை அறியுங் கருவி.
34. நிறை நிறமானி என்றால் என்ன?
தகுந்த காந்தப் புலத்தையும் மின்காந்தப் புலத்தையும் உண்டாக்கவும், அயனிக் கற்றைகளின் நிறை நிறவரை வைப் பெறுங் கருவி.
35. நிறை நிறமாலை என்றால் என்ன?
நிறை நிறமாலை வரைவி, நிறை நிறமானி ஆகிய இரண்டு கருவிகளிலும் பெறப்படும் நிறமாலை. நிறைத்தகவு உயற்விற்கேற்ப அயனிக் கற்றை அமைக்கப்படும்.
36. கண்கட்டு எண் என்றால் என்ன?
1) 2,8,20,28,50,82,126 ஆகிய எண்கள்.
2) இவ்வெண்களைக் கொண்டவை அணுக்கரு நடுநிலையணுக்களும், முன்னணுக்களும் ஆகும். இவற்றிற்குத் தனி நிலைப்புத் திறன் உண்டு.
37. நேரியன் (பாசிட்ரான்) என்றால் என்ன?
மின்னணுவின் எதிர்த் துகள். அதைப் போன்ற நிறையும் சுழற்சியும் கொண்டது. ஆனால் நேர் மின்னேற்றம் கொண்டது. இதை பால் டிராக் 1931இல் கண்டறிந்தார்.
38. நேரியன் எவற்றில் காணப்படுகிறது?
விண்கதிர்ப் பொழிவுகளில் காணப்படுகிறது.
39. நேரியன் எவ்வாறு உண்டாகிறது?
ஒரு வகைப் பீட்டா சிதைவினாலும் இது உண்டாகிறது. ஒரு மின்னணுவை எதிர் நோக்கும் பொழுது இது அழிக்கப்படுகிறது.
40. யுகாவா விசை என்றால் என்ன?
உட்கருவன்களுக்கிடையே உண்டாகும் குறுகிய எல்லையுள்ள வலிய விசை. திட்டமான நிறையுள்ள துகள் பரிமாற்றத்தால் இது உண்டாகிறது. இங்குத் துகள் என்பது யுகாவா நடுவன் (மீசான்) ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நிறை, உண்டாகிறது, துகள், நிறமாலை, நேரியன்