இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 10
91. இதைத் தொடர்ந்து வெடிக்கப்பட்ட மற்ற அணுக்கருவி அமைப்புகள் யாவை?
1988 மே-இல் பொக்கரானில் ஐந்து அணுக்கருவி அமைப்புகள் வெடிக்கப்பட்டன.
92. டாக்டர் பாபாவுக்கு அடுத்ததாக உள்ள இரு இந்திய அணு விஞ்ஞானிகள் யார்?
டாக்டர் இரா.சிதம்பரம், டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம்.
93. தமிழ்நாட்டில் அணுமின்நிலையம் எங்குள்ளது?
கல்பாக்கத்தில் உள்ளது.
94. கரி-14இன் சிறப்பென்ன?
அது ஒரு சுவடறி தனிமம்.
95. சுவடறி தனிமம் என்றால் என்ன?
இது ஒரு தனிமத்தின் ஒரிம்ம் (ஐசோடோப்) விரவல் முதலிய இயற்பியல் முறைகளையும் வேதி வினைகளையும் ஆராயப் பயன்படுவது.
96. சுவடறி நுட்பம் என்றால் என்ன?
வழியறியும் முறை. வேதி நுணுக்கம்.
97. ஒரிமம் என்றால் என்ன?
ஒரிடத் தனிமம். வேறுபட்ட நிறையும் ஒரே அணு எண்ணுங் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள். எ-டு. டியூட்ரியம், ட்ரைட்டியம் என்பவை அய்டிரஜனின் ஒரிமங்கள்.
98. ஒரிமங்களின் பயன்கள் யாவை?
மருத்துவம், வேளாண்மை, தொல் பொருளியல் முதலிய துறைகளில் பயன்படுதல்.
99. முதல் செயற்கை மாற்றுத் தனிமமாக்கலை உற்றுநோக்கியவர் யார்?
ரூதர்போர்டு, 1919.
100. மின்னணுக்களோடு அலைகளை தொடர்புபடுத்தியவர் யார்?
டி புரோக்கிளி, 1923.
101. சாகா அணு இயற்பியல் நிறுவனம் எப்பொழுது எங்கு நிறுவப்பட்டது?
இந்நிறுவனம் 1948இல் சாகா அவர்களால் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இந்தியாவில் முதல்முதலில் அணு இயற்பியல் கற்பிக்கப்படுவதற்கு இவரே காரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 10 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, இயற்பியல், என்றால், தனிமம், யார், சுவடறி, டாக்டர்