இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 1
1. அணு இயற்பியல் என்றால் என்ன?
அணுக் கரு அமைப்பு, அதன் இயல்புகள், வினை ஆகியவை பற்றி ஆராயும் இயற்பியல் பிரிவு.
2. அணு என்றால் என்ன?
ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி. இதை எளிதாகப் பிரிக்க இயலாது. வேதி வினைக்கு உட்படுவது.
3. அணுவிலுள்ள மூன்று பகுதிகள் யாவை?
முன்னணு (புரோட்டான்), அல்லணு (நியூட்ரான்), மின்னணு (எலக்ட்ரான்).
4. முன்னணு என்றால் என்ன?
நேர்மின்னேற்றமுள்ள (+) நிலைத்த அடிப்படைத்துகள். அணுக் கருவின் ஆக்கப் பகுதி.
5. இதைக் கண்டறிந்தவர் யார்?
ரூதர்போர்டு, 1914.
6. முன்னணுக்களுக்கும் அல்லணுக்களுக்கும் அமைப்புண்டு
என்பதைக் கண்டுபிடித்தது யார்,
இராபர்ட் ஹார்ட்ஸ்டட்டர், 1961.
7. முன்னணுச் சிதைவு ஆய்வுகள் எங்கு, எப்பொழுது நடத்தப் பட்டன? அதன் நோக்கம் யாது?
1987இல் இவற்றை அமெரிக்காவும் ஜப்பானும் நடத்தின. நோக்கம் நியூட்ரினோக்களைக் கண்டறிவது. பெருமெகல்லன் முகிலிலுள்ள மீஒளி வில்மீனிலிருந்து வந்தவை இவை. இந்த ஆய்வுகள் புதிய அறிவியல் ஒன்றை உருவாக்கியுள்ளன. அது உற்றுநோக்கு நியூட்ரினோ வானியல் என்பதாகும்.
8. அல்லணு என்றால் என்ன?
அணுக்கருவிலுள்ள மின்னேற்ற மில்லாத் துகள்.
9. அல்லணுவைக் கண்டறிந்தவர் யார்?
ஜேம்ஸ் சாட்விக், 1932.
10. அல்லணுக்கள் அணு உலையில் ஏன் குண்டுகளாகப் பயன் படுத்தப்படுகின்றன?
அவற்றிற்கு மின்னேற்றம் இல்லை. ஆகவே, குண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, யார்