இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 7

61. அணுக்கருவினை என்றால் என்ன?
அணுக்கருவின் உள்ளே ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் தொடர்விளைவு. இது முதன்முதலில் காக் கிராப்ட், வால்டன் ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டது.
62. அணுக்கருவன்கள் என்றால் என்ன?
முன்னணுக்களுக்கும் அல்லனுக்களுக்குமுள்ள பொது வான பெயர்.
63. எளிதில் பிளவுறக்கூடிய தனிமம் எது?
யுரேனியம்-235.
64. அணு உலையில் கரிக்கோல்களின் வேலை என்ன?
இவை தொடர் இயக்கத்தைக் கட்டுப்படுத்துபவை.
65. தொடர்வினை என்றால் என்ன?
யுரேனியம் 235 என்னும் கதிரியக்கத் தனிமம் தொடர்ந்து சிதைதல்.
66. அணுக்குண்டு என்றால் என்ன?
ஓர் அணுக்கருப் போர்க்கருவி. அணுப்பிளவு அடிப் படையில் செய்யப்படுவது. பேரழிவை உண்டாக்குவது.
67. உலகின் முதல் அணுக்குண்டு எத்திட்டத்தில் எங்கு யாரால் உருவாக்கப்பட்டது?
உலகின் முதல் அணுக்குண்டு உருவாகக் காரணமானவர் இராபர்ட் ஒப்பன்ஹெய்மர்.இது1942இல் மான்ஹாட்டன் திட்டத்தில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இவர் அனுப்பிளவை 1940இல் கண்டறிந்தார். அணுக்குண்டின் தந்தை எனப்படுபவர்.
68. முதல் இரு அணுக்குண்டுகளும் எங்கு எப்பொழுது போடப்பட்டன?
1945 ஆகஸ்டு 6இல் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவிலும் ஆகஸ்டு 9இல் நாகசாகியிலும் போடப்பட்டன.
69. நீர்வளிக்குண்டு என்றால் என்ன?
அய்டிரஜன் குண்டு. அணுப் பிணைவு அடிப்படையில் அமைந்தது. இதில் அய்டிரஜன் கருக்கள் ஈலியக் கருக்களாக மாற்றப்படுவதால் அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது.
70. சோவியத்து ஒன்றியத்தில் நீர்வளிக் குண்டு உருவாக உதவியவர் யார்?
ஆண்ட்ரி சகரோவ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 7 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அணுக்குண்டு, உருவாக்கப்பட்டது