இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 5

41. வேண்டர்வால் விசை என்றால் என்ன?
அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசை.
42. சேயணு என்றால் என்ன?
கதிரியக்கத்தால் ஏற்படும் கருவைடு. பிரிகையால் உண்டாகும் அயனி.
43. அணு உலை என்றால் என்ன?
அணுக்கள் பிளவுறும் உலை.
44. உற்பத்தி அணு உலை என்றால் என்ன?
அணு உலை. இது பிளவுப் பொருள்களைப் பயன் படுத்துவது மட்டுமல்லாமல், பிளவுப்படாப் பொருள் களையும் பிளவுப் பொருள்களாக மாற்றவல்லது.
45. முதல் உற்பத்தி அணு உலை எங்கு நிறுவப்பட்டது?
இடாகோவில் 1951இல் நிறுவப்பட்டது.
46. அணு உலைக் கழிவுகள் என்றால் என்ன?
அணு எரிபொருள்களான ரேடியம், தோரியம் முதலியவற்றைப் பிளக்கும்பொழுது ஏற்படுபவை. இவை நீர்ம நிலையில் உலோகக் கலங்களில் அடைத்து புவிக்கடியில் புதைக்கப்படுகின்றன.
47. முதல் உணு உலையை உருவாக்கித் தொடர்வினையை நிகழச் செய்தவர் யார்?
1942இல் சிகாகோவில் பெர்மி என்பார் நிகழச்செய்தார்.
48. முதல் அணு விபத்து எப்பொழுது ஏற்பட்டது?
1952இல் கனடாவில் ஏற்பட்டது.
49. அமெரிக்க அணு ஆற்றல் ஆணையத்தின் சிறப்பென்ன?
1952இல் முதல் உற்பத்தி அணு உலையை உருவாக்கி, இது ஒரே சமயம் புளுட்டோனியத்தையும் ஆற்றலையும் உருவாக்கியது.
50. சீராக்கி என்றால் என்ன?
அணு உலைகளின் உள்ளகங்களில் விரைவாகச் செல்லும் அல்லணுக்களின் விரைவைக் குறைக்கப் பயன்படும் பொருள். எ-டு. நீர், கரிக்கோல், பாரபின் மெழுகு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, உற்பத்தி