மருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்
61. நேக்கோ என்பது என்ன?
தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய நிறுவனம்.
62. என்ஜிஓ என்றால் என்ன?
அரசு சாரா அமைப்பு (Non - Governmental Organization) எயிட்ஸ் நோய் ஒழிப்பு முதலிய சமூகப் பணிகளில் ஈடுபடுவது.
63. தாளம்மை என்றால் என்ன?
காது முன் உமிழ் நீர்ச்சுரப்பிகள் வீங்குவதால் உண்டாகும் நோய் நிலைமை. பண்டுவம் உண்டு.
64. பெரியம்மை என்றால் என்ன?
கடுமையான தொற்று நோய். பெரியம்மை நச்சியத்தினால் உண்டாவது. அதிகக் காய்ச்சல் இருக்கும். கொப்புளங்கள் உண்டாகும். ஒருவாரம் வரை இருக்கும். கொப்புளங்கள் ஆறும்பொழுது வடுக்களாகும். இவற்றிற்கு அம்மை வடுக்கள் என்று பெயர். பொதுவாக, இது ஒருவருக்கு ஒரு தடவைதான் வரும். ஒரு தடவை வந்தபின் தடுப்பாற்றல் தானாகவே உடலில் உண்டாகும்.
65. சின்னம்மை என்றால் என்ன?
ஒரு நச்சிய நோய். முதல் நாள் தோலில் தடிப்பு தோன்றும். அடைகாலம் 10 - 15 நாட்கள். தொற்றுத் தடுப்புக் காலம் 25 நாட்கள்.
2. அழற்சி
66. கண்ணழற்சி என்றால் என்ன?
கண் வீங்கிய நிலை.
67. வாயழற்சி என்றால் என்ன?
வாய் வீக்கம். ரிபோபிளேவின் என்னும் வைட்டமின் குறைவினால் வாய் ஓரங்களில் புண் ஏற்படுதல்.
68. சளியழற்சி என்றால் என்ன?
தொண்டைச் சுரப்பிச் (தைராய்டு) சுரப்பு குறைவால் உண்டாகும் நோய்.
69. இதன் அறிகுறிகள் யாவை?
மயிர் நீங்கல், தோல் வறட்சி, தோல் தடிப்பு, எடை மிகுதல், ஊக்கச்செயல் குறைவு, வளர்சிதை மாற்றக்குறைவு.
70. செவியழற்சி என்றால் என்ன?
செவி வீக்கம் ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நோய், உண்டாகும்