மருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்
51. படர் தாமரை என்றால் என்ன?
பூஞ்சையால் ஏற்படும் தோல் நோய்.
52. சொறிசிரங்கு என்றால் என்ன?
அரிப்புண்ணியால் ஏற்படுவது. அதிகம் தொற்றக் கூடிய தோல்நோய். கந்தகக் களிம்பு தடவலாம். ஊசியும் போட்டுக் கொள்ளலாம்
53. நீரிழிவு என்றால் என்ன?
சர்க்கரை நோய். மாப்பொருள் வளர்சிதை மாற்றக் குறைவினால் ஏற்படும் மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, ஊசி போட்டுக் கொள்ளுதல் ஆகிய இரண்டின் மூலமே கட்டுப்படுத்தலாம்.
54. இதன் வகைகள் யாவை?
1. தீவிய நீரிழிவு நோய்.
2. அல்தீவிய நீரிழிவு நோய்.
55. எயிட்ஸ் நோய் என்றால் என்ன?
ஈட்டு எதிர்ப்பாற்றல் குறை நோயியம். (acquiredimmune deficiencysyndrome) நச்சியத்தினால் விலைமகள் மூலம் பரவுவது. குழந்தைகளையும் பற்றுவது.
56. இந்நோய் எப்பொழுது எங்குக் கண்டறியப்பட்டது?
அமெரிக்காவில் 1981இல் கண்டறியப்பட்டது. உலகெங்கும் பரவியுள்ளது. குறிப்பாகச் சமூகத்தில் கீழ்த்தட்டில் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுவது.
57. இதன் குறிப்பிடத்தக்க இயல்பு யாது?
ஒர் அழிவுநோய். வெள்ளணுக்களை அழிப்பதால் தடுப்பாற்றல் உள்டாவதற்கு வழியில்லை.
58. எயிட்ஸ் நோய்க்கு நிலையான மருந்து உள்ளதா?
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்பொழுது அசிடோதைமிடின் என்னும் மருந்து பயன்படுகிறது. சித்த மருந்துவத்தால் இதைப் போக்கலாம் என்று கூறுகின்றனர்.
59. எயிட்ஸ் விழிப்புணர்வுத்திட்டம் என்றால் என்ன?
புற்றுநோய்போல் பரவும் ஆட்கொல்லி நோய் எயிட்சைத் தடுக்க அனைத்து அமைப்புகளும் மேற்கொண்டுள்ள திட்டம்.
60. எச்ஐவி என்றால் என்ன?
மனிதத் தடுப்பாற்றல் குறைபாட்டு நச்சியம் (Human Immuno - Deficiency Virus) எயிட்ஸ் நோயை உண்டாக்குவது, உயிர்க் கொல்லி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோய், என்ன, என்றால், எயிட்ஸ், நீரிழிவு