மருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்

131. நீர்ப் பெரு வயிறு என்றால் என்ன?
மகோதரம். உட்சூழ் படலக் குழியில் நீர் திரண்டிருத்தல்.
132. குள்ளமை என்றால் என்ன?
குன்றிய வளர்ச்சி. மரபணுக் குறைபாட்டினால் ஏற்படுவது. இதனால் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். குழந்தைப் பருவத்தில் அல்லது காளைப் பருவத்தில் மூளையடிச் சுரப்பி குறைவாகச் சுரப்பதால் இது உண்டாவது.
133. மயங்கி விழுதல் என்றால் என்ன?
மூளை சட்டென்று குருதிச் சோகை அடையும்பொழுது ஏற்படும் மயக்க நிலை.
134. ஒவ்வாமை என்றால் என்ன?
தூசி, தூள் முதலிய ஒவ்வாப்பொருள்களுக்கு உடல் உண்டாக்கும் இயல்பு நீங்கிய தடுப்புத் துலங்கல்.
135. நீர்க்கோவை என்றால் என்ன?
கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் வடிதல்.
136. அரக்கமை என்றால் என்ன?
பருவ முதிர்ச்சிக்கு முன் மூளையடிச் சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் உண்டாகும் அதிக வளர்ச்சி. இது ஒரு குறை நோய்.
137. சொத்தை என்றால் என்ன?
பற்சிதைவு அல்லது எலும்புச் சிதைவு.
138. தோல் வறட்சி என்றால் என்ன?
இயல்பற்ற அளவுக்குத் தோல் வளரும் நோவு.
139. விந்தொழுக்கு என்றால் என்ன?
தானாகவே விந்து வெளியேறுதல். இது ஒரு இயற்கை வெளிப்பாடே அளவுக்கு மீறும்பொழுது மருத்துவரை அணுகுவது நல்லது.
140. துயில்நடை என்றால் என்ன?
தானாக இயங்கும் நரம்புத்தளர்ச்சி நிலை. இந்நிலை உள்ளவர்கள் தூக்கத்தில் நடப்பார்கள். எல்லாச் செயல்களையும் செய்வார்கள். ஆனால், விழித்தபின் அவர்களுக்கு அவை பற்றிய நினைவு வராது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்