மருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்
![Diseases and Pathogens](images/diseases_and_pathogens.jpg)
81. இதன் வகைகள் யாவை?
1. பித்தநீர்ப்பை வலி - பித்த நீர்க்கல்
2. குடல் வலி - கடும் வயிற்றுவலி
3. மலக்குடல் வலி - சிறு நீரகக் கல்
4. கருப்பை வலி - அதன் பொருள்களை வெளியேற்ற முயலும்பொழுது ஏற்படுதல்.
82. நரம்பு வலி என்றால் என்ன?
ஒரு நரம்பு பகிர்வில் ஏற்படும் நோவு. எ-டு முந்நரம்பு வலி.
83. வலிப்பு என்றால் என்ன?
மாறி மாறி தசை சுருங்கலும் விரிதலும். மூளைச் செயல் கோளாறினால் நடைபெறுவது.
84. நரம்பு வலிப்பு என்றால் என்ன?
உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே தெரியாது. நெருக்கடியிலுருந்து விடுப்படப் பல்லைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய அறிகுறிகளை வெளிப்படுத்துவார். உளப் போராட்டத்தாலும் நடுக்கத்தாலும் உண்டாவது.
85. இதன் அறிகுறிகளாவன?
இழுப்பு, மயக்கம், தசை நடுக்கம். விலகுநிலை இதன் தனித்தன்மை.
86. எழுத்தாளர் கைவலி என்றால் என்ன?
கையிலும் முன்கையிலும் ஏற்படும் சுருக்கத்தினால் ஏற்படுவது. எழுதும் பொழுது தவறான உட்காரும் நிலைமையே இதற்குக் காரணம்.
87. இடுப்பு வலி அல்லது மூச்சுப் பிடிப்பு என்றால் என்ன?
இடுப்புத் தசைகளின் வலி நிலை. அவற்றின் நார் உறைகள் வீங்குவதே இதற்குக் காரணம். முள் எலும்புத் தட்டு இடம் பெயர்வதாலும் ஏற்படலாம்.
88. சுளுக்கு என்றால் என்ன?
ஓர் இணைப்பைச் சூழந்துள்ள மென் திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம் முதலியவை ஏற்படும். வலி நீக்கும் மருந்தைத் தடவிப் போக்கலாம்.
4. கட்டி
89. கட்டி என்றால் என்ன?
இயல்புக்கு மீறிய வீக்கம்.
90. இதன் வகைகள் யாவை?
1. எளிய கட்டி - தீங்கு தராதது. மருந்து மூலம் போக்கலாம்.
2. தீங்கு தரும் கட்டி - புற்று நோய்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஏற்படும், இதன், கட்டி, நரம்பு