மருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்

71. செவி ஒழுக்கு என்றால் என்ன?
செவியிலிருந்து சீழ் வடிதல்.
72. சிலிகோ அழற்சி என்றால் என்ன?
சிலிகா தூசியை உட்கொள்வதால் ஏற்படும் நோய். பொதுவாகக் சுரங்கக் தொழிலாளர்களிடம் காணப்படும். நாட்பட்ட நுரையீரல் நோய்.
73. நரம்பழற்சி என்றால் என்ன?
இது ஒரு நோய் நிலைமை. உணர் நரம்புகளை நச்சியம் தாக்குவதால் ஏற்படுவது. நரம்புகள் நெடுகக் கொடிய வலியும் கொப்புளங்களும் உண்டாகும்.
74. மூளை - வட அழற்சி என்றால் என்ன?
மூளையும் தண்டுவடமும் வீங்குதல்.
75. கெர்னிக் குறி என்றால் என்ன?
முப்படல அழற்சியின் அறிகுறி. முழங்காலை நீட்ட இயலாது.
76. குடல் வால் அழற்சி என்றால் என்ன?
குடல் வால் நோயுற்று வீங்குதல். அதிக வலி இருக்கும் பொழுது இதை அறுத்து நீக்குவதே நல்லது. இது ஒரு பயனற்ற உறுப்பு.
77. தொண்டை அழற்சி என்றால் என்ன?
தொண்டைச் சளிப் படலம் வீங்குதல்.
3. வலி
78. வலி என்றால் என்ன?
திறந்த நரம்பு முளைகளில் உள்துண்டல். புறத்துண்டல் மூலம் பெறப்படும் குறைவு உணர்வு. இது ஒரு நோயின் அறிகுறியே.
79. தலைவலி என்பது யாது?
தலையில் ஏற்படும் நோவு. இது பல நோய்களின் அறிகுறி. இது ஒற்றைத்தலைவலி, நெருக்கடித் தலைவலி என பல வகை.
80. குடல் வலி என்றால் என்ன?
தடையினால் உட்குழிவான உள்ளுறுப்பு தசைத் துடிப்பை உண்டாக்குவதால் ஏற்படும் கடும் வலி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அழற்சி, குடல், வீங்குதல், ஏற்படும், நோய்