மருத்துவம் :: நோய்களும் நோய்க்கூறுகளும்

141. நாட்துயில் என்றால் என்ன?
ஒரு நோய் அல்லது குறைபாடு. பகலில் தூங்க விரும்பும் உந்தல் முனைப்பாக இருக்கும்.
142. குரல் குறை என்றால் என்ன?
குரல் நாண்கள் அல்லது குரல் வளை நோய். வலிப்பு நோயினால் குரலிழப்பு ஏற்படுதல்.
143. இரவு சிறுநீர்க்கழிவு என்றால் என்ன?
சிறுநீரகக் கோளாறு. தானாகவே சிறுநீர் கழிந்து படுக்கை நனையும்.
144. செரியாமை என்றால் என்ன?
உண்ட உணவு நொதிகளின் செயலுக்கு உட்படாததால், ஏற்படும் செரிக்காத நிலை. உண்ணா நோன்பே சிறந்த மருந்து.
145. நேர்மூச்சு என்றால் என்ன?
ஒருவர் நேராக நிற்கும்பொழுது மட்டுமே மூச்சு விடக் கூடிய நிலை.
146. இறுகுநோய் (சிரோசிஸ்) என்றால் என்ன?
ஒர் உறுப்பின் நோய் நிலை எ-டு கல்லீரலுக்குரிய பொருள் நீங்கி, அதற்குப் பதில் நார்த்திசு உண்டாகும். இதனால் அடிவயிறு பருத்துக் காணப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோய்களும் நோய்க்கூறுகளும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நிலை, நோய், குரல்