வேதியியல் :: தனிமம், சேர்மம், கலவை
1. தனிமம் என்றால் என்ன?
மூலகம். ஒரே அணுஎடை கொண்ட அணுக்களால் முழுதுமான பொருள். பொதுவான வேதிமுறைகளால் எளிய பொருள்களாகச் சிதைக்க முடியாது.
2. இதன் வகைகள் யாவை?
1. உலோகம் - இரும்பு.
2. அலோகம் - கரி.
3. நீர்ம நிலையில் இருக்கும் ஒரே உலோகம் யாது?
பாதரசம்.
4. நீர்ம நிலையில் இருக்கும் ஓர் அலோகம் யாது?
புரோமின்
5. அண்மைக் காலம் வரை எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
118 தனிமங்கள்.
6. அன்னில் பெண்டியம், அன்னி ஹெக்சியம் என்பவை யாவை?
அன்னிஸ் பெண்டியம் தனிமம் 105.
அன்னிஸ் ஹெக்சியம் தனிமம் 106.
7. தனிமங்களின் பண்புகள் யாவை?
1. பெரும்பாலும் எளிதில் கடத்திகள்.
2. உலோகம் அலோகம் என இருவகை.
3. திண்ம, நீர், வளி நிலைகளில் இருப்பவை.
4. உலோகப்போலி உண்டு. புறவேற்றுமையும் உண்டு.
5. கம்பிகளாக்கலாம், தகடாக்கலாம்.
8. தனிம இணைவு என்றால் என்ன?
மூலக்கூறுகள் உண்டாகத் தனிமம் தன்னை இணைத்துக் கொள்ளுதலும் அவ்வாறு செய்தலுக்குரிய பண்பும் ஆகும்.
9. அல்லோபார் என்றால் என்ன?
இயற்கையில் இல்லாத ஒரு தனிமத்தின் ஒரிமங்களைக் (ஐசோடோப்புகள்) கொண்ட கலவை.
10. ஒப்பளவு என்றால் என்ன?
தனிமங்களிடையே ஒரு தனிமம் இருக்கும் சார்பளவு. காட்டாகப் புவிஒட்டில் ஆக்சிஜனின் அளவு 50%.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிமம், சேர்மம், கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தனிமம், என்ன, என்றால், இருக்கும், அலோகம், யாவை, உலோகம்