வேதியியல் :: தனிமம், சேர்மம், கலவை

61. கரைவை என்றால் என்ன?
இதில் கரைபொருளும் கரைப்பானும் திட்டமாகச் சேர்ந்திருக்கும்.
62. கரைதிறன் என்றால் என்ன?
குறிப்பிட்ட வெப்பநிலையில் 100 கிராம் கரைப்பானை நிறைவுள்ள கரைசலாக்குவதற்குத் தேவையான கரைபொருளின் கிராமின் எடை.
63. கரைவை நாட்டம் என்றால் என்ன?
கரைப்பானிலுள்ள மூலக்கூறுகளைக் கரைசலிலுள்ள அயனிகள் கவர்தல்.
64. கரைப்பான் பகுப்பு என்றால் என்ன?
ஒரு சேர்மத்திற்கும் கரைப்பானுக்கும் இடையே நடைபெறும் வினையில் சேர்மம் கரைதல்
65. சால்வே முறை என்பது யாது?
அம்மோனியா சோடா முறை. சோடியம் கார்பனேட்டை உருவாக்கும் தொழில்முறை.
66. கொதிநிலை மாறாக் கரைசல் என்றால் என்ன?
நீரில் அய்டிரோகுளோரிகக் காடிக்கரைசல். இது இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை.
67. நீரற்ற கரைசல் என்றால் என்ன?
கரைப்பான் நீராக இல்லாத கரைசல். இக்கரைப்பான் கனிமமாகவே கரிமமாகவோ முன்னணு சார்ந்ததாகவோ இருக்கும்.
68. திட்டக்கரைசல் என்றால் என்ன?
பருமனறிபகுப்பில் பயன்படும் செறிவு தெரிந்த கரைசல்.
69. சுல்லட் கரைசல் என்றால் என்ன?
பொட்டாசியம் அயோடைடும் துத்தக்குளோரைடும் அயோடினும் சேர்ந்த கரைசல்.
70. வெடிதூள் என்றால் என்ன?
வீட்டுக்கரி, கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட் சேர்ந்த வெடிகலவை.
71. உருகுகலவை என்றால் என்ன?
நீரற்ற பொட்டாசியம் கார்பனேட்டு, சோடியம் கார்பனேட்டு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிமம், சேர்மம், கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கரைசல், பொட்டாசியம்