வேதியியல் :: தனிமம், சேர்மம், கலவை
21. முப்படிச் சேர்மம் என்றால் என்ன?
ஒத்த மூன்று மூலக்கூறுகளைச் சேர்ப்பதால் உண்டாகும் மூலக்கூறு அல்லது சேர்மம்.
22. இடையீட்டுச் சேர்மம் என்றால் என்ன?
இத்தொகுதியில் மாறுநிலைத் தனிமத்தின் ஒர் அணு. இரு ஒருபோக்கு பென்சீன் வளையங்களோடு சேர்க்கப்படுகிறது. எ-டு. பெரோசீனும் அதன் ஒப்புருக்களும்.
23. கரிமக் குளோரின் சேர்மம் என்றால் என்ன?
கரி, அய்டிரஜன், குளோரின் ஆகியவற்றைக் கொண்டது.
24. இதில் பூச்சிக்கொல்லிகள் யாவை?
BHC, DDT
25. கரிம உலோகச் சேர்மம் என்றால் என்ன?
ஒடும் நிறமற்ற நீர்மம். குறைந்த கொதிநிலை, உலோகம் நேரிடையாகக் கார்பனோடு சேரும்.
26. நுண்படலச் சேர்மம் என்றால் என்ன?
மெலிந்த அடுக்குகளைக் கொண்ட படிக அமைப்புள்ள கூட்டுப் பொருள். சிலிகேட்டுகள் இத்தகைய கூட்டுப் பொருள்களை உருவாக்குபவை. எ-டு. டால்க், பைரோபைலட்
27. பலபடிச் சேர்மம் என்றால் என்ன?
எளிய மூலக்கூறுகளின் நீள்வரிசை கொண்ட சேர்மம். ஒரே செயல்நிலை வாய்பாடு. ஆனால் அதிக மூலக்கூறு எடை கொண்டது.
28. இதன் வகைகள் யாவை?
1. இயற்கைப் பலபடிச் சேர்மம் - புரதங்கள்.
2. செயற்கைப் பலபடிச் சேர்மம் - பாலிதிலiன்.
29. நீரின் வேதிப்பெயர் என்ன?
அய்டிரஜன் ஆக்சைடு, H2O.
30. நீர் என்றால் என்ன?
அய்டிரஜனும் ஆக்சிஜனும் 2:1 என்னும் வீதத்தில் கலந்துள்ள கூட்டுப் பொருள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிமம், சேர்மம், கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சேர்மம், என்ன, என்றால், பலபடிச், கூட்டுப்