வேதியியல் :: தனிமம், சேர்மம், கலவை
31. நீரின் பயன்கள் யாவை?
1. அனைத்துக் கரைப்பான், 2. குளிர்விப்பி. 3. ஆக்சிஜன் கரைந்துள்ளதால் நீர்வாழ் உயிர்களை வாழவைக்கிறது. 4. வேளாண்மைக்குப் பெரிதும் உதவுவது.
32. டியூட்ரியம் என்றால் என்ன?
D. இது கன அய்ட்டிரஜன் ஆகும்.
33. கடினத்தன்மை என்றால் என்ன?
கால்சியம், மக்னீசியம் ஆகிய இரு உலோகங்களின் உப்புகள் நீரில் கரைந்திருப்பதால் ஏற்படுவது கடினத்தன்மை.
34. கடினத்தன்மை எத்தனை வகைப்படும்?
இருவகைப்படும். 1. தற்காலிகக் கடினத்தன்மை. 2. நிலைத்த கடினத்தன்மை.
35. தற்காலிகக் கடினத் தன்மை என்றால் என்ன?
கால்சியம், மக்னிசியம் ஆகியவற்றின் இரு கார்பனேட்டுகள் நீரில் கரைந்திருப்பதால் உண்டாகும் கடினத்தன்மை.
36. தற்காலிகக் கடினத்தன்மையை எவ்வாறு போக்கலாம்?
கொதிக்கவைத்தல் மூலமும் கால்சிய அய்டிராக்சைடைச் சேர்ப்பதின் மூலமும்போக்கலாம்.
37. நிலைத்த கடினத்தன்மை என்றால் என்ன?
கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைவதால் உண்டாவது.
38. நிலைத்த கடினத்தன்மையை எவ்வாறு போக்கலாம்?
சோடியம் கார்பனேட் பெர்முடிட் ஆகிய இரண்டின் மூலம் போக்கலாம்.
39. கடினத்தன்மையைப் பொறுத்து நீர் எத்தனை வகை?
1. மென்னீர் 2. கடினநீர்.
40. மென்னீர் என்றால் என்ன?
சவர்க்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்கும் நீர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிமம், சேர்மம், கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கடினத்தன்மை, என்றால், என்ன, போக்கலாம், நிலைத்த, கால்சியம், நீரில், தற்காலிகக்