வேதியியல் :: தனிமம், சேர்மம், கலவை

51. கரைசலின் வகைகள் யாவை?
1. நிறைவுறுகரைசல் - குறிப்பிட்ட வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் கரைப்பானில் கரைய வேண்டிய அளவுக்குக் கரைபொருள் கரைந்து அதில் கொஞ்சம் கரைபொருள் தங்குதல்.
2. நிறைவுறாக் கரைசல் - அவ்வாறு தங்காத கரைசல்.
52. கரைப்பான் என்றால் என்ன?
கரையவைக்கும் பொருள். நீர்.
53. கரைபொருள் என்றால் என்ன?
கரைப்பானில் கரையும் பொருள். உப்பு.
54. கரைப்பான் விரும்பும் கூழ்மம் என்றால் என்ன?
ஒரு நீர்மத்தில் கூழ்மத் தொங்கலில் எளிதில் சேரும் பொருள்.
55. கரைப்பான் வெறுக்கும் கூழ்மம் என்றால் என்ன?
கூழ்ம நிலையில் இருக்கும் பொருள். ஆனால், நீர்மங்களை விலக்குவது.
56. இயல்பு வெப்பநிலையும் அழுத்தமும் என்றால் என்ன?
இயல்பு வெப்பநிலை 273°k, அழுத்தம் 76 செ.மீ. NTP.
57. அனைத்துக் கரைப்பான் என்பது எது?
நீர்.
58. சில. கரைப்பான்கள் கூறு.
பெட்ரோல், கார்பன் இரு சல்பைடு, ஆக்சாலிகக் காடி
59. கையில் வண்ணக்குழைவு பட்டுள்ளது. அதைப் போக்கும் கரைப்பான் யாது?
மண்ணெண்ணெய்.
60. கரைசலை விரைவாக்கும் வழிகள் யாவை?
1. கரைபொருளைப் பொடி செய்து நீரில் போடுதல்,
2. குலுக்குதல்.
3. வெப்பப்படுத்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிமம், சேர்மம், கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கரைப்பான், பொருள், கரைபொருள்