வேதியியல் :: தனிமம், சேர்மம், கலவை
41. கடினநீர் என்றால் என்ன?
சவர்க்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்காதது கடினநீர்.
42. கனநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?
டியூட்டிரியம் ஆக்சைடு. இதில் அய்டிரஜன் டியூட்டிரியத்தினால் பதிலீடு செய்யப்படுகிறது.
н2O + D2 ⇔ D2O + н2
அணுஉலைகளில் சீராக்கியாகவும் வளர்சிதைமாற்ற ஆய்வுகளில் துலக்கியாகவும் பயன்படுகிறது.
43. கலவை என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வீத அளவு மாறிச் சேர்ந்தது. தகுந்த இயற்பியல் முறைகளில் இதிலுள்ள பகுதிகளைப் பிரிக்கலாம். எ-டு உப்புக்கரைசல்.
44. காற்று ஒரு கலவையா கூட்டுப் பொருளா?
கலவை.
45. கலவைக்கும் சேர்மத்திற்குமுள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?
கலவையில் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் இரா. சேர்மத்தில் குறிப்பிட்ட வீதத்தில் இருக்கும். கலவையில் நடைபெறுவது இயல்பு மாற்றம். சேர்மத்தில் நடைபெறுவது வேதிமாற்றம்.
46. இயைபுறுப்பு என்றால் என்ன? ஒரு கலவையிலுள்ள தனிம வேதிப் பொருள்களில் ஒன்று. இக்கலவையில் வேதிவினை நிகழாது. எ-டு நீர் பனிக்கட்டி சேர்ந்த கலவை. ஒர் இயைபுறுப்பு கொண்டது. நைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த கலவை. இரு இயைபுறுப்புகள் கொண்டது.
47. ஊறித்தல் (லீச்சிங்) என்றால் என்ன?
கரைபொருளைக் கரைப்பானைக் கொண்டு வெளுத்தல்.
48. நீர்மக் காற்று என்றால் என்ன?
வெளிறிய நீலநிறமுள்ள காற்று. முதன்மையாக நீர்ம ஆக்சிஜனையும் நீர்ம நைட்ரஜனையும் கொண்டது.
49. நற்கலவை என்றால் என்ன?
உறைநிலை மாறாக் கலவை. இரு பொருள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்திருப்பதால், அதே பொருளைக் கொண்ட மற்ற எந்தக் கலவையும் குறைந்த உருகுநிலையைக் கொண்டிராது.
50. கரைசல் என்றால் என்ன?
கரைப்பானும் கரைபொருளும் சேர்ந்த ஒருப்படித்தான கலவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிமம், சேர்மம், கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கலவை, கொண்டது, வீதத்தில், காற்று, குறிப்பிட்ட