வேதியியல் :: தனிமம், சேர்மம், கலவை
11. பயனுறுதனிமம் என்றால் என்ன?
உயிரியின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான தனிமங்களுக்குத் தேவையான தனிமங்களில் ஒன்று.
12. ஓரிமம் (ஐசோடோப்) என்றால் என்ன?
ஓரிடத்தனிமம். வேறுபட்ட நிறையும் ஒரே அணு எண்ணுங் கொண்ட தனிமத்தின் அணுக்கள். எ-டு செனான் - 135. செனானுக்கு 22 ஒரிமங்கள் உண்டு.
13. ஓரிமத்தின் பயன்கள் யாவை?
1. வேதிவினைகளை ஆராய.
2. மருத்துவத்துறையிலும் வேளாண்துறையிலும் பயன்படுதல்.
3. குழாய்களில் எண்ணெய்க் கசிவைக் கண்டறியப் பயன்படுகின்றன.
4. இயக்க ஆய்வுகளில் பயன்படுதல்.
14. ஆஸ்டன் என்பவர் யார்?
1912இல் இவர் தாம் புதிதாகப் புனைந்த நிறை நிறமாலை வரைவியைக் கொண்டு ஓரிமங்களைக் (ஐசோடோப்புகள்) கண்டறிந்தார்.
15. சேர்மம் என்றால் என்ன?
கூட்டுப்பொருள். இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்து உண்டாகும் ஒருபடித்தான கலவை. இதன் பகுதிப் பொருள்களை எளிய இயற்பியல் முறைகளால் பிரிக்க இயலாது. இது வேதிமாற்றத்திற்கு உட்பட்டது. எ-டு நீர், H2O. பொதுவாகத் தனிமத்தின் உப்புகள் கூட்டுப் பொருள்களே.
16. சேர்மத்தின் இரு வகைகள் யாவை?
1. கனிமச் சேர்மம் - சோடியம் குளோரைடு.
2. கரிமச் சேர்மம் - சாராயம் மற்றும் பல சேர்மங்களும் உண்டு.
17. முனைப்படாச் சேர்மம் என்றால் என்ன?
இருமுனைத் திருப்புத்திறன் இல்லாத சேர்மம். எ-டு பென்சீன், கார்பன் நாற்குளோரைடு.
18. நிறைவுறு சேர்மம் என்றால் என்ன?
கட்டவிழ் இணைதிறனில்லாத கரிமச் சேர்மம். இதில் பதிலீட்டுச் செயலினால் அணுக்கள் சேர்தல் நடைபெறுகின்றன.
19. இருபடிச்சேர்மம் என்றால் என்ன?
இருமூலக் கூறுகள் இணைவதால் உண்டாகும் கூட்டுப் பொருள். எ-டு. அலுமினியக் குளோரைடு.
20. முத்தனிமச் சேர்மம் என்றால் என்ன?
மூன்று தனிமங்களிலிருந்து உண்டாகும் கூட்டுப் பொருள். எ-டு சோடியம் சல்பேட்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனிமம், சேர்மம், கலவை - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சேர்மம், என்ன, என்றால், கூட்டுப், உண்டாகும்