வாமன புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
சிவனும், விஷ்ணுவும்
துண்டிக்கப்பட்ட பிரம்மன் தலை, சிவனுடைய கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. பிரம்மன் பிராமணர் ஆகையினால், சிவனை பிரம்மஹத்தி தோஷம் வலுவாகப் பற்றிக் கொண்டது. சிவன் ஒவ்வொரு தீர்த்தமாகச் சென்று குளிக்க பிரம்மஹத்தி தோஷம் காரணமாக தீர்த்தங்கள் வற்றி விட்டன. கடைசியாக விஷ்ணுவிடம் சென்று தன் குறையைச் சொன்னார் சிவன். வாரணா என்ற ஆறும், அசி என்ற ஆறும் சங்கமிக்கும் இடத்தில் வாரணாசி என்ற ஊர் உள்ளது. அதில் தச அஸ்வமேதா என்ற ஊர் உள்ளது. அங்கு சென்று நீ பிரார்த்தனை செய்தால் கபாலம் நீங்கும் என்று கூறினார். சிவன் அவ்வாறே செய்ய கபாலம் கையை விட்டு நீங்கியது. நீண்ட காலம் கபாலம் கையில் இருந்ததால் சிவனுக்குக் கபாலி என்றும், அந்த இடத்திற்குக் கபால மோட்சனா என்ற பெயரும் நிலைத்தது.
தட்சயக்ஞம் : புதிய கோணம்
(ஏனைய பல புராணங்களிலும் தட்சயக்ஞம் சொல்லப் பட்டிருப்பதால் அவற்றினின்று மாறுபடும் பகுதிகளை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.)
தட்சன் யக்ஞம் செய்வதையும், சிவன் அழைக்கப் படவில்லை என்பதையும், தட்சன் மகளும் சிவன் மனைவியுமாகிய சதி தன் தங்கை மகள் விஜயாவின் மூலம் அறிந்து அங்கேயே உயிரை விட்டு விட்டாள். அங்கிருந்த சிவனின் கோபத்தில் கரிய நிறமுடைய வீரபத்திரன் தோன்றினார். விஜயாவையும் சிவன் தோற்றுவித்தார். வீரபத்திரன், விஜயாவுடன் சேர்ந்து தட்சன் யாகசாலைக்குச் சென்று அதனை அழிக்க முற்பட்டனர். அதனைத் தடுக்க வந்த விஷ்ணுவுடன் வீரபத்திரன் போர் செய்தார். விஷ்ணுவுடைய சக்கரம் வீர பத்திரனுடைய சூலாயுதத்தை எதிர்த்து நிற்க முடியாததால், விஷ்ணு வீரபத்திரனுடன் மற்போர் புரிந்தார். மற்போரில் விஷ்ணுவிடம் தோற்ற வீரபத்திரன் சிவனிடம் வந்தார். சிவன் விஷ்ணுவிடம் சண்டை போட விஷ்ணு தோற்று ஒடிவிட்டார். பிறகு அங்கிருந்த முனிவர்களை எல்லாம் வீரபத்திரன் தண்டித்தார். புஷா என்ற முனிவர் காலைப் பிடித்து ஆகாயத்தில் சுழற்றினார். புஷாவின் பற்களை எல்லாம் உடைத்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 2 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், பிரம்மன், சென்று, வீரபத்திரன், கையில், வீரன், விஷ்ணுவிடம், இரத்தம், கபாலம், தட்சன், காயத்தில், விஷ்ணு, இருந்து, வந்த