வாமன புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
தன்னுடைய முற்பிறவிகளில் பெரிதும் பாவம் செய்ததின் காரணமாக நரகத்தில் பலகாலம் இருந்து, பிராமணன், புலி, கழுதை, பறவை, எருது ஆகிய பல பிறவிகள் எடுத்து இறுதி யாக நிஷாகரா என்ற பெயரில் கோஷகராவிற்கு மகனாகப் பிறந்தான். ஜதிஸ்மரா என்னும் பழம் பிறப்பு அறியும் சக்தி பெற்றிருந்தமையால், அவனுக்குப் பழம்பிறப்புகள் பற்றித் தெரிந்தன. பத்து வருடங்கள் கிணற்றினுள் இருந்த பொழுது தன் தவறுகளுக்காகப் பெரிதும் வருந்தியதில் பேசும் சக்தி யையும், கேட்கும் திறனையும் பெற்றான். இனி அவன் நேர்மையான வாழ்க்கை வாழப்போவதாகக் கூறினான்.
மற்ற புராணங்களைப் போலவே, வாமன புராணத்தின் சிறப்பைப் பற்றியும், அதனைப் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் புலஸ்திய முனிவர் நாரதருக்குக் கூறி முடித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 17 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam,