வாமன புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
இவ்வாறு தரப்பட்ட பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காத்யாயனி விந்தியமலைக்குச் சென்றாள்.
விந்தியமலையில் நிகழ்ந்தவை
விந்தியமலை சென்ற காத்யாயனி அதையே தன் இருப்பிடமாகக் கொண்டாள். அந்த மலையில் மகிஷாசுரன் தூதர்கள் சண்டா, முண்டா என்ற இருவர், காத்யாயனியைப் பார்த்தவுடன் அவள் அழகில் ஈடுபட்டு தங்கள் அரசனுக்கு ஏற்ற மனைவி என்று முடிவு செய்து அரசனிடம் கூறினர். இதைக் கேட்ட மகிஷன் மகிழ்ந்து தன்பால் உள்ள வீரர்கள் பலரையும், சண்டா, முண்டா, வித்லக்ஷா, கபிலா, வஷ்கலா, உக்ரபுதா, சிக்ஷீரா, ரத்தவிஜா, மாயையின் மகனாகிய துர்தபி ஆகிய தலைவர்கள் பலரையும் காத்யாயனியிடம் பேச அனுப்பினான். அவர்களில் துந்துபி காத்யாயனியிடம் வந்து, எம்முடைய அரசனாகிய மகிஷா மூன்று உலகத்தையும் வென்று அடிமைப்படுத்தியவன். அவனை எதிர்ப்பார் மூவுலகிலும் எவருமில்லை. நீயோ அழகில் சிறந்தவள். உன் அழகுக்கு ஏற்றவன் எங்கள் அரசன். அவனுக்கு ஏற்ற பட்டமகிஷி நீதான். ஆகவே நீ எங்கள் அரசனை மணந்து கொள்ள வேண்டுகிறோம் என்றான். அதைக் கேட்ட காத்யாயனி, நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நான் மணந்து கொள்வதில் த.படவில்லை. ஆனால் எங்கள் குடும்ப வழக்கம் என்று ஒன்று உள்ளது. எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்ணை யாராவது மணக்க வேண்டும் என்றாலும் மணமகளுடன் போர் செய்ய வேண்டும். அவன் வெற்றி பெற்றால் அவள் அவனுக்கு மாலையிடுவாள். அம்முறையைப் பின்பற்றினாலும் நான் மணம் செய்து கொள்கிறேன்’ என்று காத்யாயனி கூறினாள்.
துந்துபி அதனைச் சென்று மகிஷனிடம் கூறியதும் அவன் போருக்குத் தயாரானான். சிக்ஷீராவைத் தலைமைத் தளபதியாக நியமித்து நமரா முன்நின்று போர் செய்தான். சண்ட முண்டா தவிர அனைவரையும் கொன்ற பிறகு காத்யாயனி மகிஷனை எதிர்த்தாள். அவன் எருமை வடிவம் கொண்டு தாக்கவும் காத்யாயனி சிம்மத்தை விட்டுவிட்டு அவன் முதுகில் ஏறி அமர்ந்து அவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 7 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஆற்றல், காத்யாயனி, அவள், அவன், கொடுத்தனர், எங்கள், முண்டா, இந்திரன், சென்று, பிரம்மன், கேட்ட, கொண்டு, தேவர்கள்