வாமன புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
உபமன்யுவின் வேண்டுதலில் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு என்றென்றும் பால் கிடைக்க அருள்புரிந்தார்.
நிஷாகரா
முன்னொரு காலத்தில் கோஷகரா என்றொரு பிராமணன் வசித்து வந்தான். அவன் மனைவி பெயர் தர்மிஷ்டா. இவர்களுக்குக் கண் தெரியாத, வாய் பேசாத குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையைச் சிறிதும் விரும்பாத தர்மிஷ்டா ஆறு நாட்களே ஆகி இருந்த அக்குழந்தை யைத் தன் வீட்டின் வெளியே கொண்டு சென்று விட்டு விட்டாள்.
அப்பொழுது அங்கு வந்த அரக்கி உருவம் கொண்ட பெண், அக்குழந்தையை எடுத்துக் கொண்டு, தன் குழந்தையை அங்கே விட்டுச் சென்றது. தான் எடுத்துச் சென்ற குழந்தை யைத் தன் கணவனிடம் காண்பிக்க, அவன் மனைவியிடம், “முட்டாளே! கோஷகரா என்ற பிராமணன் மிகவும் சக்தி வாய்ந்தவன். நடந்ததைத் தெரிந்து கொண்டு அவன் உனக்குச் சாபமிடுவான். ஆதலால் உடனே சென்று இந்தக் குழந்தையை விட்டு விட்டு வா” என்று கூறினான்.
அரக்கியின மகன், கோஷகராவின் வாசலில் குளிரினால் பெருங் குரலெடுத்து அழத் துவங்கினான். ஊமையான தன் குழந்தை சப்தம் செய்வதைக் கண்ட தர்மிஷ்டா தன் கணவனை அழைக்க, அவன் வந்து அக்குழந்தையைப் பார்த்தவுடன் அது தங்கள் குழந்தையன்று என்பதை அறிந்து கொண்டான். சில மந்திரங்களைக் கூறியவுடன் அக்குழந்தை தன் அழுகையை நிறுத்திற்று. அரக்கியும், அப்பிராமணர் மகனைக் கொண்டு வந்து கொடுத்து விட்டாள். ஆனால் அவளது குழந்தை, பிராமணன் மந்திரத்தில் கட்டுண்டு கிடந்ததால், அரக்கியால் தன் குழந்தையைத் திரும்பப் பெற முடியவில்லை. அப் பிராமணன் தன் குழந்தைக்கு நிஷாகரா என்றும், அரக்கியின் குழந்தைக்கு திவாகரா என்றும் பெயர் சூட்டினான். சிலகாலம் கழித்து அவர்கள் இருவருக்கும், கோஷகரா வேதங்கள் முதலியவற்றைப் பயிற்றுவித்தான். அவன் மகனாகிய நிஷாகரா மிகவும் மந்த புத்தி உள்ளவனாக இருந்தான். கோபம் கொண்ட பிராமணன் தன் மகனை ஒரு பாழுங்கிணற்றில் வீசி, அதனை ஒரு கல் கொண்டு மூடிவிட்டான். அவனது மனைவி தர்மிஷ்டாவும் குழந்தை காணாமல் போய்விட்டதாக நினைத்துக் கொண்டாள்.
நிஷாகரன், அக்கிணற்றினுள் நீண்ட காலம் தங்கி இருந்தான். அதில் ஒரு மரம் நிறைந்த பழங்களுடன் இருந்ததால், அதனைத் தின்று வாழ்ந்து வந்தான். பத்து வருடங்கள் சென்றன. தர்மிஷ்டா ஒருநாள் அந்த வழியே செல்லும் பொழுது, ஒரு கல்லினை வைத்து அக்கிணற்றினை மூடி இருப்பது கண்டு, இதனை யார் கல் கொண்டு மூடி யிருக்கிறார்கள் என்று பெருங்குரலில் கேட்க, கிணற்றின் உள்ளிருந்த நிஷாகரா, “அன்னையே! தந்தைதான் இக்காரியம் செய்தார்” என்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 16 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கொண்டு, அவன், குழந்தை, பிராமணன், சிவபெருமான், தர்மிஷ்டா, நிஷாகரா, கோஷகரா, விட்டு, விஷ்ணு, வந்தான், உடனே, சென்று, இருந்தான், என்றும்