புதுக் கவிதைகள் - கருப்பாகி போன ஞாயிறு...
- கூடல்.காம் என்ன செய்ய முடிந்தது அந்த அதிகாலைப் பொழுதில் அலுப்பு நீக்கி எழுவதற்குள் காவுப் பசி கொண்ட கடல் ராட்சசி மீண்டும் விழுங்கிவிட்டாள் கடல்கோளால் எம் தமிழ்க் கூட்டத்தை. உயிர்களும் உடல்களும் உருக்குலைந்தது கண்டு உறைந்து போனது குருதி மொழிக்குள் அடங்காத மொழி கொண்டு புலம்பித் தவிக்கிறது மனம். எங்கிருந்தாலும் இயற்கையாலும் செயற்கையாலும் என் தமிழர்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படியோ..... அவர்களது ஆன்மா அமைதிபெற வேண்டுதல் வைப்போம். உடமைகளையும் வடிவுகளையும் இழந்தோர்க்கு உரிய பாதுகாப்பு கொடுத்து வாரி அணைத்து வாழ்வு கொடுக்க நம் கரங்களையும் நீட்டுவோம்....... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருப்பாகி போன ஞாயிறு... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -