புதுக் கவிதைகள் - நேச நிஜங்கள்
- ம. திலகபாமா உனக்கு வேண்டியதைக் கேள் ஆசையைச் சொல் என்றாய் வெளிப்படையான பேச்சு உனக்கும் எனக்கும் தரும் நெருக்கமென்றாய் காதுக்கிடை கிசுகிசுத்த என் பேச்சுக்கிடை அணைத்தாய் முத்தம் தந்தாய் வாங்கி வராது போயிருந்த பூவுக்காய் மூவாயிரத்து எழுபத்தொன்றாவது முறையாக நாளை நினைத்து வாங்கி வருவதாக வாக்குறுதியுடனும் தூங்கிப் போயிருந்தாய் இன்னமும் நிறைவிலாது நான் சொல்லாமல் விட்டது எது தேடல் நான் துவங்க நடுநிசி ஆந்தை அலறலாய் எனக்குள் அலறியது நீ நீயாய் இல்லாது என் சொற்களின் செயல்பாடாய் போயிருந்த நிஜம் உன் ஆசைகளோ நான் அட்சய பாத்திரமாய் இருக்க ஒட்டிக் கொண்டிருந்த ஒரே ஒரு பருக்கையளவாவது உன் நேசம் இருக்கின்ற பட்சத்தில் பாத்திரம் மாறும் அட்சயமாய் வெளிப்படையான பேச்சும் விளங்காத நீ எப்போதுணர்வாய் கேட்டது ஸ்பரிசமல்ல நேச நிஜமென்று |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேச நிஜங்கள் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - நான்