புதுக் கவிதைகள் - வாங்கிவைத்த வாழ்த்து அட்டைகள்
- ரேணுகா தேவி பலவித வண்ணங்களுடனும் விரிந்து மலர்ந்த பூக்களுடனும் தொடும் பொழுதே பூவென உணரும் வகையில்.... வாங்கிவைத்த வாழ்த்து அட்டைகள் அனுப்ப நினைத்தும் அனுப்பாமல் இன்னும் என்னிடமே.....! அனுப்பிவைத்தால் அன்னியமாகி விடுவோமோ... என்று அஞ்சியஞ்சியே அனுப்பாமல் விட்டவைகள் ஏராளம்.....!. ஒருவேளை - அனுப்பியிருந்தால்.... நம்மிருவரது அன்னியோன்யத்தையும் அழுத்தமாய் சொல்லியிருக்குமோ...? இருந்திருக்கலாம் ஆனால்..... நீ திருமணமாகிச் சென்றபின் உனக்கான பிறந்த நாளின்போது வாங்கி வைத்த வாழ்த்து அட்டைகள் இன்னும் என்னிடமேதான் இருக்கிறது என் பிரிய சகோதரியே....! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாங்கிவைத்த வாழ்த்து அட்டைகள் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -