புதுக் கவிதைகள் - இரவில்...
- அ. அரவிந்த் முதன் முதலில் உன்விழிகளை உளிகளாக்கி என் உள்ளத்தை உருக்குலைத்ததை நீ மறந்து விட்டாய்! என்னால் முடியவில்லை உன் விழிக்குள் என்முகமும் என் விழிக்குள் உன்முகமும் பார்த்து ரசித்ததை நீ மறந்து விட்டாய்! என்னால் முடியவில்லை உச்சி வெயிலில் உன் நிழலில் நானும் என் நிழலில் நீயும் இளைப்பாறியதை நீ மறந்து விட்டாய்! என்னால் முடியவில்லை. அந்தி வேளையில் சந்தித்ததை அதிகாலையில் சிந்தித்ததை நீ மறந்து விட்டாய்! என்னால் முடியவில்லை. கடலலையில் கால் நனைத்து மணல் மேட்டில் மண ஏட்டை புரட்டியதை நீ மறந்து விட்டாய்! என்னால் முடியவில்லை மணலில் நதியாக மனதில் நினைவாக இரவில் கனவாக பகலில் நனவாக இசைந்திருந்ததை நீ மறந்து விட்டாய்! என்னால் முடியவில்லை என் சுவாசத்தில் நீயும் உன் சுவாசத்தில் நானும் உயிர் வாழ்ந்ததை நீ மறந்து விட்டாய்! என்னால் முடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து நீ ஜோடியுடன்! எதுவுமே முடியாமல் நான் தாடியுடன்! உன்னால் மட்டும் எப்படி முடிகிறது? தயவு செய்து உன் இதயத்தை கொஞ்சம் இரவல் தா! உன்னை மறந்துவிட்டு திருப்பி தந்து விடுகிறேன். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரவில்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - மறந்து, முடியவில்லை, விட்டாய், என்னால்