புதுக் கவிதைகள் - காதலெனும் தீயினிலே...
- கண்ணன் இறந்த காலம் காதலுக்கு மட்டும் இல்லை - அது இருந்தாலோ அதற்கு பேர் காதலில்லை பிறந்த பயன் காதலிலே பூர்த்தியாகும் - காதல் பிழம்பாலே நம் கண்கள் ஜோதியாகும் ஒடியாத கிளையென்று நினைத்திருந்தேன் - கிளி உட்கார்ந்து போன உடன் வளைந்து போனேன் வடியாத நதியென்று நினைத்திருந்தேன் - நீ வந்தஉடன் உன் மடியில் வடிந்து போனேன்! உன்னை நான் பார்த்த உடன் நெஞ்சிக்குள்ளே - அடி உட்சிறகு ஒரு லட்சம் முழைக்கக் கண்டேன் விண்ணைப் போய் முட்டிவிடக் கூடாதென்றே - இன்று விரிகின்ற சிறகுகளை சுருக்கிக் கொண்டேன் எங்கே நான் பறந்தாலும் என்ன பெண்ணே - தினம் இழைப்பாற உன் மடி தான் எனக்கு வேண்டும் கங்கை நதி ஊரெல்லாம் திரிந்தாலென்ன - அடி கடலில் தான் அது சென்று சேர வேண்டும் சிரிப்பதற்கு மட்டுமிந்த உதடு போதும் - பார்வை சிந்தி விழ மட்டுமந்த கண்கள் போதும். எரிப்பதற்கு மட்டுமந்த அழகு போதும் - ஆணை இடுவதற்கு மட்டுமந்த விரல்கள் போதும் கருப்புகளை மறந்து விட்டு எரிந்து நிற்கும் - ஒரு கனகமணி விளக்கைப் போல் நமக்கும் தோழி உறுப்புகளை மறந்துவிட்ட காதல் வேண்டும் - அது உண்மையிலே சாத்தியமா முயன்று பார்ப்போம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதலெனும் தீயினிலே... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - போதும், மட்டுமந்த, வேண்டும்