புதுக் கவிதைகள் - இரயில் பயணம்

- ஆர். கண்ணாகாந்தி எத்தனை கனவுகள் - அவள் வருகைக்கு முன், இன்பம் இல்லாதிருந்த என் நெஞ்சில் - நீண்ட பயணம் கொண்டு - என் உள்ளம் எல்லாம் காதல் என்னும் ஒருவழி பாதை அமைத்து - அதில் பயணம் செய்யும் அவளது மௌன விழிகள் எத்தனை முறை பார்ப்பது - அவளது விழிகளை புரிந்து கொள்ள முடியாத மொழியின் வர்ணனை. மௌன மொழியின் பயணம் ஓர் முடிவு தொடுமா? நான் அவளது நெஞ்சில் பயணம் தொடர கூடுமா? வீதியின் பயணத்தைத்தான் தொடர வேண்டும். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரயில் பயணம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - பயணம், அவளது