புதுக் கவிதைகள் - நான் என்ற ஞாபகம்

- க.ச. மனுவேல் உடல் ஒரு தொழிற்சாலை! அதனுள் நிறைய இயந்திரங்கள். இரத்தத்தை ஓய்வின்றி ஓடச் செய்யும் மோட்டார் இயந்திரம் - இதயம்! அதன் அழுக்கை ஆக்ஸிஜன் சோப்பால் சுத்தப்படுத்தும் சலவை இயந்திரம் - நுரையீரல்! அத்தனை வேலைகளையும் கட்டுப்படுத்தி, நினைவில் நிறுத்தி ஆராய்ந்து, ஆணைகள் வழங்கும் கணிப்பொறி இயந்திரம் - மூளை! உடல் ஒரு தொழிற்சாலை! உடல் தொழிற்சாலையை உயிர் மின்சாரம் கொண்டியக்கி, வாழ்க்கைத் தொழில் செய்து வந்த தொழிலாளிதான் - 'நான் என்ற ஞாபகம்' ஒருநாள், இயந்திரங்களின் உத்தரவாத காலம் முடிந்து போனது, வாழ்க்கைத் தொழில் நின்று போனது. இலாபமா? நஷ்டமா? கணக்குப் போட்டுப் பார்ப்பதற்குள் - இறப்பு எனும் ஒருவழிப் பாதையில் உயிர் ஓடிவிட்டது. ஒன்றுக்கும் உதவாத உடற் தொழிற்சாலையை மண் மூடிவிட்டது. நான் என்ற ஞாபகம் எங்கு போனது? உடலோடு புதைந்து விட்டதா? உயிரோடு மறைந்து விட்டதா? அல்லது காற்றோடு இன்னும் இருக்கிறதா? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான் என்ற ஞாபகம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - போனது, இயந்திரம், உடல்