புதுக் கவிதைகள் - சிறகை விரி
- சரவணக்குமார் பாலைவனத்தில் பறவைகள் கூட்டம் அது பிணம் தின்னும் கழுகுகள் கூட்டம்... அங்கு முல்லைப் பூக்களும் பூக்கின்றன சிகப்பாய்... அங்கு சிகப்பாய் தெரிகிறது நிலவு... யூப்ரடீஸ், டைகரிஸில் குருதி கலந்ததின் பிரதிபலிப்பாய் இருக்கலாம்... எண்ணெய்க் கிணறுகளை மட்டும் எரிக்கவில்லை இயற்கை அன்னையின் வயிற்று பகுதியில் கீறல் போடுகின்றது - இந்த இரக்கமற்ற ஏவுகணைகள்... இடது கண்ணைக் குத்தி வலது கண் நகைக்கும் வழக்கம் இனியும் ஏனோ? மூன்றாம் உலகப்போரை மூட்டாதே நான்காம் உலகப் போருக்கு நாளை உலகம் சுற்றாதே! சமாதானம்:- தந்தைக்குப் பிள்ளை கொள்ளியிடும் நிகழ்வு போர்:- பிள்ளைக்கு தந்தை கொள்ளியிடும் நிகழ்வு... சிவப்பு ஆவி செம்மேகம் செந்நிறத்தில் மழை பொழியும் பொழியும் முன்னே வெள்ளை மாளிகைக்கு வெண் புறா விடுங்கள் எஞ்சிய பிஞ்சுகளின் கெஞ்சிய வார்த்தைகள் கூறி புஷ்ஷின் நெஞ்சுருகச் செய்திடு சட்டென்று சிறகை விரித்து பட்டென்று போரை நிறுத்து வெண் புறாவே ம்... சீக்கிரம் சிறகை விரி... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறகை விரி - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -