புதுக் கவிதைகள் - அறிவியல்

- கே. மீனாட்சி ஊட்டி குளிரை ஒரு நொடியில் தருகின்ற 'ஏ.சி.' அறிவியல் பாட்டி குளித்தாலும் முடி காய வைக்கும் 'ஹீட்டர்' அறிவியல்! கூடு விட்டு கூடு பாயும் புதிரான அறிவியல் நாடு விட்டு நாடு பேசும் 'இண்டர்நெட்' அறிவியல்! கத்தி கொண்டு போரிட்ட கற்கால அறிவியல் சுத்தி வந்து தாக்கச் செய்யும் 'மிக்' ரக அறிவியல்! நீராவியால் புட்டு செய்த அந்தக்கால அறிவியல் அதே ஆவியால் ஓடுகின்ற 'புகை வண்டி' அறிவியல்! குளிர்ந்த நீருக்கு மண்பானை பாட்டி கால அறிவியல் வாட்டி வதைக்கும் குளிர்தருமே அழகு 'பிரிட்ஜ்' அறிவியல்! அறிவாளி 'ஆனந்த்'தையும் அதிர வைத்து பின் ஆனந்தக் கூத்தாடும் செஸ் 'ரோபோ' அறிவியல்! ஒரு குண்டு போட்டாலும் அழிந்து விடும் என்றாலும் ஒரு பூண்டு செஞ்சிடுமோ விஞ்ஞான அறிவியல்! விடிய விடிய சுற்றி வரும் 'டி.வி சாட்டிலைட்' அறிவியல் நம் படிப்பை மடியச் செய்ய பார்க்கிறதே 'பகாசுர' அறிவியல்! சிவகாசி பொடுசுகளின் கைகளிலே பரிதாப அறிவியல் 'பொக்ரானில்' போட்டதனால் 'வல்லரசு' அறிவியல்? கார்கிலில் எதிரியை காய்த்தெடுத்த 'போஃபர்ஸ்' அறிவியல் போரினில் மாண்டு போன சகோதரனைத் தந்திடுமோ அறிவியல்? மாறிவரும் காலத்திலும் மாறிவரும் விஞ்ஞான அறிவியல் என் தாயின் மாறாத பாசத்தை தந்திடுமோ அறிவியல்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறிவியல் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - அறிவியல்