புதுக் கவிதைகள் - சில நாட்களாக...
- ஆ. வெற்றி வேலாயுதம் சில நாட்களாக என்னவென்றே தெரியவில்லை சூரியன் விழிப்பிற்கு முன்னே சர்வ சாதாரணமாய் - என் கண்களின் விழிப்பு நிகழ்கிறது... ஜன்னல் கம்பிகளிடையே என் பார்வை லேசராய் எதிர்பார்த்தவரை கண்டதும் கண்களை மறைக்க மின்னல் வேக முயற்சி... என் ஒவ்வொரு செயலும் யாரை நோக்கியோ திட்டமிட்டு நகர்த்தப்படும் சதுரங்கமாய்... என் இதயத்துடிப்பு சுவாசம் ரத்த ஓட்டம்... இவை எனக்காகவா நிகழ்கிறது... மேலும் சந்தேகங்கள் என்னைப் பற்றியே... என் வாழ்நாளை ஆயிரம் ஆண்டுகளுக்கு பெருக்கி கொள்வதற்கான முயற்சி... என்னையறியாமல் சில நாட்களாக என்னவென்றே தெரியவில்லை... கம்ப்யூட்டரிலும் கால்குலேட்டரிலும் நான்போடும் கணக்கும் தவறாய்... யாரது? என் இதயமேடையில் அரங்கேற்றம் நடத்த முயற்சிப்பது... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில நாட்களாக... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -