புதுக் கவிதைகள் - ஆசை ஆசையாய்
- எஸ். முருகன் வாழ்த்து அட்டை நீட்டுகிறேன் வாங்க மறுக்கிறாய். என்னை உன்னவனாக்கியதற்கு உனக்கு ஏதேதோ பரிசளிக்க நினைக்கிறேன் ஆனால், அவற்றையெல்லாம் ஒதுக்குகிறாய். "உன்னை விடவும் வேறெந்த பரிசும் தேவையில்லை" என்று பொய் சொல்கிறாய். சிறிதும் பெரிதுமாய் நிறைய ஆசைகளை நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருக்கிறாய் அந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவதே இப்போது என் ஆசையாகி போய் விட்டது. ஆசை ஆசையாய் வாங்கி தருவதில்தான் காதல் நெருக்கமாகிறது கண்மணி. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசை ஆசையாய் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -