புதுக் கவிதைகள் - ஒளியைத் தேடி ...
- அரவிந்த் நண்பனே நட வெற்றியின் வெளிச்சம் விழிகளுக்கு கிட்டும் வரை நட.... தோல்வியின் சுவர்கள் தடுத்தாலும் தைரியத்தால் இமயத்தைக் கூட தாண்டி விட முடியாதா? பள்ளங்களைக் கண்டு உள்ளங் கலங்காதே! வெள்ளத்தைப் பார் வழியை மாற்றுகிறதா? நண்பனே நட.... முள்ளின் முனையை முத்தமிடும் கரங்களுக்கே அழுகிய ரோஜா கிடைக்கும் சோதனைகளை தோளில் சுமக்க கற்றுக்கொள் சாதனைகள் நிச்சயம் எதிர்ப்புகள் முள்வேலியல்ல புரிந்து பார் பூ அணை அது நண்பனே நட... வெற்றியின் வெளிச்சம் விழிகளுக்கு கிட்டும் வரை நட..... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒளியைத் தேடி ... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - நண்பனே