புதுக் கவிதைகள் - மனிதனும் சாமியும்
- தமிழ்பித்தன் மானம் மறைக்க ஆடை உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு தாகம் தீர்க்க நீர் போதுமே! யார் கேட்டது மதத்தையும் மத்தால் வாழும் சாமிகளையும்... சத்தியமாய் எனக்கு பேயைக் கண்டு பயமில்லை சாமிகளைக் கண்டே... விஐபிகளை மட்டுமே காவல் காக்கும் சாமிகளும், போலீஸ்களும் பொது மக்களின் நிலையோ? வித்தியாசமில்லை அரசு அலுவலகத்திற்கும் கோவில்களுக்கும் இரண்டிலும் மாமுல் வெட்டாமல் தரிசனம் கிடையாது. சரியாய் வந்து சேருவதில்லை இலவச வேஷ்டியும், சேலையும் ஏழைக்கு. சரியாய் சேருகிறது மானியமும்...சுரண்டும்... கடவுளுக்கு... இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ்தான் இந்தியா இங்குதான் சாமிகள் ஏராளம் பக்தியை சுருக்கு படித்தவனை பெறுக்கு மனிதனாய் பிறப்பது சிறப்பன்று, மனிதனாய் வாழ்வதுவே! சிந்துவது வியர்வையாக இருக்கட்டும் ரத்தமாக வேண்டாம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனிதனும் சாமியும் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -