புதுக் கவிதைகள் - இளைஞர்களே: காதலியுங்கள்
- க. ரேவதி இரயிலுக்கு வெடிவைப்பு பாலங்கள் பல தகர்ப்பு பாலைவன வெடிவெடிப்பு அமரர் சிலையிடிப்பு பாமரர் தீக்குளிப்பு சிறுபிள்ளைக் கடத்தல் சிறுநீரகத் திருடல் ஆபாசப் படமெடுப்பு நடுரோட்டில் துகிலுரிப்பு அக்கிரமக் காரனுக்காய் அப்பாவி உயிர்விடுப்பு நதிக்கரையில் தலை மிதப்பு அலைகடலில் குருதிப்பெருக்கு காவலில் கற்பழிப்பு உயிர்களெல்லாம் பரிதவிப்பு ஆறடி மண்ணில் அடங்குதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? இனியும் வேண்டாம் இத்தனை அவலம் பாரினில் யாவரும் காதலியுங்கள் பழகியவரெல்லாம் நேசித்திருங்கள் வீழ்ந்தவர்க் கெல்லாம் கைகொடுத்திடுங்கள் விடிந்திரு முன்னம் விழித்தேயெழுங்கள் மானிடர் தவறுகள் மன்னித்திடுங்கள் தீங்கிழைப்ப தென்படு மறந்தேவிடுங்கள் இம்முறை கொள்வோம் வன்முறை வெல்வோம் இனியதோர் உலகு இன்னும் அருகில் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளைஞர்களே: காதலியுங்கள் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -